எல்லாம் பணத்திமிர், ஈகோ தான் காரணம் விடுங்க – ஆதங்கப்பட்ட கவாஸ்கருக்கு ஆறுதலுடன் இந்திய வீரர்களை விளாசிய கபில் தேவ்

Kapil Dev Sunil Gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடரில் மிரட்டலாக செயல்பட்டாலும் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இதற்கு சுமாரான அணித்தேர்வு, பும்ரா போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறுவது போன்றவை காரணமாக இருந்தாலும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக ரசிகர்கள் கொண்டாடும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Virat Kohli Rohit Sharma

- Advertisement -

ஏனென்றால் டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல துவக்கத்தை கொடுக்க வேண்டிய அவர்கள் ஆரம்பத்திலேயே சொதப்புவதால் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு போராடினாலும் இந்தியாவால் வெற்றி பெற முடிவதில்லை. எடுத்துக்காட்டாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அந்த இருவருமே ஒரு அரை சதை கூட அடிக்காமல் சொதப்பியது இறுதியில் ரகானே, ஜடேஜா, தாக்கூர் போன்றவர்களின் போராட்டத்தையும் தாண்டி இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் சமீப காலங்களாகவே விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளை கவர் ட்ரைவ் அடிப்பதற்காக வம்படியாக இழுத்தடிக்க முயற்சித்து எட்ஜ் கொடுத்து அவுட்டாகி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கபில் தேவ் ஆறுதல்:
அதனால் ஏமாற்றமடைந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் ஜாவாஸ்கர் முன்பெல்லாம் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், லக்ஷ்மன் போன்ற தற்போதைய வீரர்களை விட மகத்தான வீரர்கள் தடுமாறும் சமயங்களில் தம்மிடம் ஆலோசனை கேட்க வருவார்கள் என்று கூறினார். ஆனால் தற்போதுள்ள வீரர்களில் ஈகோ காரணமாக யாருமே தம்மைப் போன்ற முன்னாள் வீரர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை என்று கவாஸ்கர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

Rohit-and-Kohli

இந்நிலையில் தற்போதுள்ள வீரர்களிடம் ஐபிஎல் தொடரில் விளையாடிய தேவைக்கு அதிகமான பணமும் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்ற கர்வமும் திமிரும் இருப்பதாலேயே நம்மைப் போன்றவர்களிடம் யோசனை கேட்க வருவதில்லை என சுனில் கவாஸ்கருக்கு ஜாம்பவான் கபில் தேவ் ஆறுதல் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகு முறையை பற்றி சமீபத்திய பேட்டியில் கபில் தேவ் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போதுள்ள வீரர்களிடம் இருக்கும் நல்ல விஷயம் என்னவெனில் அவர்களிடம் தேவையான அளவு தன்னம்பிக்கை இருக்கிறது. அது அவர்களிடமிருந்து வெளிப்படும் நல்ல வித்தியாசமாகும். ஆனால் அவர்களிடம் இருக்கும் எதிர்மறையான விஷயம் என்னவெனில் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நினைக்கிறார்கள். இதை எவ்வாறு நான் சிறந்த முறையில் மதிப்பிடுவது என்று எனக்கு தெரியவில்லை. அதாவது தற்போதுள்ள வீரர்கள் நல்ல தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் அதற்காக யாரிடமும் எதைப் பற்றியும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றனர்”

Sunil Gavaskar 3

“ஆனால் எங்களைப் போன்ற அனுபவமிக்கவர்கள் அவர்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சில நேரங்களில் அதிகப்படியான பணம் வந்தால் திமிரும் வந்து விடும். அதனால் இப்போதுள்ள தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று கருதுகிறார்கள். அதுவே வித்தியாசமாகும். தற்போதைய நிலைமையில் நிறைய வீரர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று நான் சொல்வேன்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர் உதவ தயாராக இருக்கும் போது ஏன் நீங்கள் பேசுவதில்லை?அதில் என்ன ஈகோ இருக்கிறது? அப்படி கேட்பதில் எந்த ஈகோவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு அனைத்தையும் சாதிக்கக் கூடியவர்களாக இருக்கலாம்”

Kapil Dev Rohit Sharma Virat Kohli

இதையும் படிங்க:IND vs WI : கொஞ்சம் ஓரமா போங்க, ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமை மிஞ்சிய – சுப்மன் கில் புதிய உலக சாதனை

“ஆனால் 50 சீசன்களில் விளையாடிய ஒருவர் உங்களுக்கு ஏதேனும் சிறிய விஷயங்களில் உதவ முடியும். குறிப்பாக ஒருவருடைய ஆலோசனையை கேட்கும் போது உங்களுடைய எண்ணங்கள் மாறலாம்” என்று கூறினார். இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement