IND vs WI : கொஞ்சம் ஓரமா போங்க, ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமை மிஞ்சிய – சுப்மன் கில் புதிய உலக சாதனை

Shubman Gill Babar Azam
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது. பார்படாஸ் நகரில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் எண்ணத்துடன் ஓய்வெடுத்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 181 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதிகபட்சமாக இசான் கிசான் 55 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி மற்றும் ரொமாரியா செப்ஃபார்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் 63* ரன்களும் கேசி கார்ட்டி 48* ரன்களும் எடுத்து 36.4 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

பாபரை மிஞ்சிய கில்:
இதன் வாயிலாக 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக வெற்றி பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மறுமலர்ச்சி காணும் வெற்றியை பதிவு செய்துள்ளது. மறுபுறம் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் இறுதிக்கட்ட பயணமாக பார்க்கப்படும் இந்த தொடரில் தேவையற்ற மாற்றங்களை செய்த இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் முதல் போட்டியில் தடுமாற்றமாக செயல்பட்ட சுப்மன் கில் இந்த போட்டியில் 34 ரன்கள் குவித்து இஷான் கிசானுடன் இணைந்து 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தரமான வீரராகவே போற்றப்படும் அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் 4 அரை சதங்கள், 3 சதங்கள், 1 இரட்டை சதம் உட்பட 1352 ரன்களை 61.45 என்ற சிறப்பான சராசரியிலும் 104.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 26 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் தற்போதைய கேப்டன் பாபர் அசாமின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் (இந்தியா) : 1352* ரன்கள்
2. பாபர் அசாம் (பாகிஸ்தான்) : 1322 ரன்கள்
3. ஜொனதன் ட்ராட் (இங்கிலாந்து) : 1303
4. பக்கார் ஜமான் (பாகிஸ்தான்) : 1275 ரன்கள்
4. ராசி வேன் டெர் டுஷன் (தென் ஆப்பிரிக்கா) : 1267 ரன்கள்

Shubman Gill 1

கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணிகள் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். மேலும் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அசத்திய அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருது வென்று தலா 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவின் 2 ஒய்ட் வாஷ் தொடர் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

அத்துடன் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்த அவர் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் இரட்டை சதமும் டி20 தொடரில் சதமும் அடித்து 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் சதமடித்தார்.

Shubman Gill

இதையும் படிங்க:IND vs WI : கடைசி 10 மேட்ச்ல இதுதான் முதல்முறையாம். தோல்வி பாதையை முடிவுக்கு கொண்டுவந்த – வெஸ்ட் இண்டீஸ்

அதனால் ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்துள்ள அவர் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் வருங்கால சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மனாக பார்க்கப்படுகிறார். இருப்பினும் வெளிநாடுகளில் சற்று தடுமாறும் பிரச்சனையை கொண்டுள்ள அவர் அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement