பணத்தை வெச்சு திறமையையும் நேர்மையையும் வாங்க முடியாது – இந்தியாவை எச்சரிக்கும் மொய்ன் கான், காரணம் என்ன

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா பங்கேற்காது என்று அறிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் உங்களது நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அடுத்த நாளே அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதிலிருந்தே கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரத்தில் இருநாட்டுக்குமிடையே சர்ச்சையான கருத்துக்களும் மோதல்களும் நிலவி வருகின்றன. இருப்பினும் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடாக இருக்கிறது.

- Advertisement -

பணத்தால் வாங்க முடியாது:
அதே போல் உலகின் இதர நாடுகளை காட்டிலும் ஐசிசி’க்கே அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் என்ன தான் பாகிஸ்தான் பேசினாலும் இறுதியில் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த நிலையில் ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாய் போன்ற பொதுவான இடத்தில் நடைபெறும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியன.

அதற்கு பதிலடியாக இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்காமல் அருகில் இருக்கும் வங்கதேசம் போன்ற பொதுவான இடத்தில் பாகிஸ்தான் தன்னுடைய போட்டிகளில் விளையாட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் அந்த செய்திகளை உறுதியாக்கும் வகையில் தங்கள் நாட்டில் விளையாடாமல் பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடினால் பாகிஸ்தானும் உலகக் கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் மொயின் கான் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் அதிக பணம் சம்பாதிக்கிறோம் என்பதற்காக இதர நாடுகள் எப்படி எங்கே விளையாட வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்படி பணத்தால் சாதிக்க நினைப்பது கிரிக்கெட்டின் நேர்மை தன்மைக்கு எதிரானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இருநாட்டுக்கும் இடையே கிரிக்கெட் நடைபெறுவதற்கு இருநாட்டு வாரியங்களும் பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா ஏன் வர மறுக்கிறது என்பதில் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும். ஒருவேளை ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராமல் போனால் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்க செல்லக் கூடாது. அந்த வகையில் இதை பாகிஸ்தான் வாரியம் எதிர்க்கும் என்று நினைக்கிறேன். அதே போல ஒருவேளை இந்தியா தன்னுடைய ஆசிய கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாடினால் பாகிஸ்தானும் தன்னுடைய உலகக் கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க:வீடியோ : மன்கட் செய்ய பிளான் போட்ட அஷ்வின், பிளாஷ்பேக் பார்த்த ஜோஸ் பட்லர் – தவானின் ஆட்டத்தால் பஞ்சாப் அதிரடி ஸ்கோர்

“மேலும் பணத்தின் தாக்கம் கிரிக்கெட்டில் எதிரொலிக்கக் கூடாது. எனவே பணத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் இவற்றில் செயல்பட்டால் நிச்சயமாக தீர்வு கிடைக்காது. ஏனெனில் கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பெயரையும் தனித்துவமான திறமையும் போட்டியையும் கொண்டுள்ளது. அது அப்படியே தொடர வேண்டும். மாறாக இது ஏதோ ஒரு கிரிக்கெட் வாரியத்தின் பணக்கார செல்வாக்கால் ஒரு தலைபட்சமாக மாறக்கூடாது. அப்படி நடந்தால் அது கிரிக்கெட்டின் நேர்மை தன்மைக்கு எதிரானதாகும்” என்று கூறினார்.

Advertisement