2023 ஆசிய கோப்பையில் வெல்லப்போவது இந்தியாவா – பாகிஸ்தானா? முகமது ரிஸ்வான் கொடுத்த நேர்மையான பதில் இதோ

Mohammed Rizwan
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாள் டாப் 6 அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெற உள்ளது. அதில் 6 அணிகள் மோதினாலும் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் செப்டம்பர் 2ஆம் தேதி மோதும் போட்டிக்கு தான் அனைவரிடமும் அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள் என்பதால் அப்போட்டியில் அனல் பறக்கும் என்றே சொல்லலாம். அதில் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க தயாராகி வரும் பாகிஸ்தான் அதற்கு வெள்ளோட்டமாக இந்த ஆசிய கோப்பையில் வெற்றி காண்பதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நேர்மையான பதில்:
அதற்கேற்றார் போல் சமீபத்தில் இதே இலங்கையில் ஆப்கானிஸ்தானை சந்தித்த 3 போட்டிகளிலும் வீழ்த்திய பாகிஸ்தான் தற்சமயத்தில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளதால் இந்தியாவை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை வீழ்த்தி வந்தாலும் 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தங்களுக்கு அவமான தோல்வியைப் பரிசளித்த பாகிஸ்தான் 2022 ஆசிய கோப்பையிலும் ஃபைனலுக்கு செல்ல விடாமல் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்ததை இந்தியா மறக்கவில்லை.

எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானின் பலவீனங்களை கண்டறிந்து இந்த ஆசிய கோப்பையில் தோற்கடிக்க இந்தியாவும் போராடும் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் இந்த தொடரில் தங்களுடைய அணி வலுவாக இருந்தாலும் போட்டி நாளன்று யார் அழுத்தத்தை சரியாக கையாள்கிறார்களோ அவர்களை வெற்றிவாகை சூடுவார்கள் என பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் நேர்மையான பதிலளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களுடைய அணி சிறப்பாக இருப்பது போலவே அவர்களுடைய அணியும் இருக்கிறது. மேலும் ஒரு அணியாக எங்களுடைய இருவரது தரப்பிலும் பலம் மற்றும் பலவீனங்கள் இருக்கின்றன. அப்போட்டி இந்த மொத்த உலகமும் பார்க்கும் மிகவும் அழுத்தமான போட்டியாக இருக்கும். அந்த சூழ்நிலையில் நட்சத்திர மற்றும் ரெகுலரான வீரர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்னவெனில் அனுபவமாகும். எனவே இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க:உண்மையிலேயே இந்த பார்மேட்ல விளையாடுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

“ஆனால் இந்த அனுபவம் போட்டியில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தை சரியாக கையாள்வதற்கு உதவும். எனவே போட்டி நாளன்று யார் அழுத்தத்தை சரியாக கையாள்கிறார்களோ அவர்களுக்கே வெற்றியும் சாதகமாக அமையும்” என்று கூறினார். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஃபைனல் உட்பட 3 போட்டிகளில் மோதுவதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement