உண்மையிலேயே இந்த பார்மேட்ல விளையாடுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

SKY
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக ஜொலித்து வந்தாலும், 50 ஓவர் போட்டிகளில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆகி மோசமான சாதனையை நிகழ்த்திய அவர் அடுத்ததாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இருப்பினும் 32 வயதான சூரியகுமார் யாதவியின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு ஆசியக்கோப்பை அணியிலும் இடம் கொடுத்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது உண்மையிலேயே சவாலாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எனக்கு கொடுக்கப்படும் ரோலில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் என்னால் இதுவரை சிறப்பாக செயல்பட முடியவில்லை.

ஆனால் நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வழங்குவதை குறித்து தான் தற்போது மேலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எல்லோருமே என்னை டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியிலும் நான் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். ஒருநாள் கிரிக்கெட் உண்மையிலேயே மிகவும் சவாலாக இருக்கிறது.

- Advertisement -

சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி விளையாட வேண்டும்? என்பதனை அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சீனியர் வீரரான விராட் கோலி ஆகியோரிடம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறேன்.

நிச்சயம் என்னுடைய இன்டெண்ட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் நான் மாற்ற முயற்சிப்பேன். மேலும் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய வரும்போது இனி எவ்வாறு சூழல் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்வதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.

இதையும் படிங்க : தல தோனியின் 10 வருட ஆல் டைம் மாஸ் டி20 சரித்திர சாதனையை இங்கிலாந்து வீரர் டாம் கரண் – விவரம் இதோ

எப்போதெல்லாம் நான் டக் அவுட்டில் அமர்ந்து போட்டியை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தோன்றும் இனிவரும் போட்டிகளில் என்னுடைய ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நிச்சயம் என்னால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement