விமானத்தில் Bag-யை தவறவிட்ட சிராஜ். கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் – அதற்கு நிறுவனம் அளித்த பதில்?

Mohammad-Siraj
- Advertisement -

இந்திய அணி அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. ஆனால் டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ் தனது Bag-யை விமான பயணத்தின் போது தவறவிட்டதாக வெளியிட்ட ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வங்கதேச தொடர் முடிந்த கையோடு இந்திய அணி டாக்காவில் இருந்து டெல்லி வழியாக மும்பை வந்து சேர்ந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏர் விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது பேக்கை தவறவிட்டுள்ளார். மேலும் அதுகுறித்து உடனடியாக அவர் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தனது பேக்கை கண்டுபிடித்து தருமாறும் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

அந்த பதிவில் சிராஜ் குறிப்பிட்டதாவது : நான் டாக்காவில் இருந்து டெல்லி வழியாக மும்பைக்கு ஏர் விஸ்தாரா விமானம் மூலம் பயணித்தேன். அப்போது எனது 3 பேக்கை நான் சோதனை செய்தேன். அதில் ஒன்று தவறிவிட்டது. நான் தவறவிட்ட அந்த பேக்கில் முக்கியமான பொருட்களை வைத்திருந்தேன்.

- Advertisement -

எனவே அதனை கண்டுபிடித்து ஹைதராபாத்தில் தருமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் முகமது சிராஜின் இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஏர் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்ததாவது : இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், தவறவிட்ட பேக்கை கண்டுபிடிக்க தங்கள் ஊழியர்கள் முயற்சி செய்வார்கள் என விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 2022-ஆம் ஆண்டில் விராட் கோலி, கே.எல் ராகுலையே பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர் அஷ்வின் – அசத்தல் விவரம் இதோ

இப்படி ஏர் விஸ்தாரா அளித்த பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள முகமது சிராஜ் தனது பேக் விரைவில் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் இப்படி அடிக்கடி விமானப்பயணத்தின் போது சந்திக்கும் சிக்கல்கள் இயல்பான ஒன்றுதான்.

Advertisement