2022-ஆம் ஆண்டில் விராட் கோலி, கே.எல் ராகுலையே பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர் அஷ்வின் – அசத்தல் விவரம் இதோ

Ashwin-and-Kohli
- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் கடைசி மற்றும் 2 ஆவது டெஸ்ட் போட்டியை வெல்ல தமிழிக வீரர் அஷ்வின் முக்கிய காரணமாக அமைந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் 6 விக்கெட்டை கைப்பற்றிய அவர் பேட்டிங்கிலும் 2 ஆவது இன்னிங்சில் 42 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக 2 ஆவது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஷ்வின் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரையே பின்னுக்கு தள்ளியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த தகவலும் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 2 அரைசதத்துடன் 270 ரன்களை 30 ரன்கள் சராசரியுடன் அடித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 27 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இந்த 2022-ஆம் ஆண்டு 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 265 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த 11 இன்னிங்ஸ்களில் விராட் கோலி ஒருமுறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். இந்த ஆண்டு அவரது சராசரி 26.50 மட்டுமே. அதேபோன்று இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 79 மட்டுமே.

- Advertisement -

அதேபோன்று கே.எல் ராகுல் இந்த 2022-ஆம் ஆண்டு 8 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 137 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த 8 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே அவர் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ராகுலின் சராசரி 17.12 மட்டுமே இப்படி இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மோசமான செயல்பாடுகளை இந்த புள்ளி விவரங்களே வெளிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : வேற வழி இல்ல – 2023 உ.கோ வெல்ல ரோஹித் சர்மா போட்டுள்ள சிறப்பான ஒரே கல்லில் 2 மாங்காய் திட்டம் இதோ

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் தனது பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதேபோன்று இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். கே.எல் ராகுல் சிக்ஸர்களே அடிக்கவில்லை. ஆனால் அஷ்வின் 3 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement