வேற வழி இல்ல – 2023 உ.கோ வெல்ல ரோஹித் சர்மா போட்டுள்ள சிறப்பான ஒரே கல்லில் 2 மாங்காய் திட்டம் இதோ

Rahul
- Advertisement -

வங்கதேச சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்து நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதலில் நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட நிறைய சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கேற்ப ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்ட பாண்டியா இந்த தொடரிலும் செயல்படுகிறார்.

அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக திரும்புகிறார். அவரது தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் திரும்பியுள்ள நிலையில் 37 வயதான சிகர் தவான் கழற்றி விடப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இருதரப்பு தொடர்களை வென்ற போதிலும் உலகக் கோப்பைகளை வென்று தரவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்து 2021 இறுதியில் கேப்டன்ஷிப் பதவிகளிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார்.

- Advertisement -

வேற வழி இல்ல:
அவருக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா கேப்டனாக சாதாரண இருதரப்பு தொடர்களில் அசத்தினாலும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 முக்கிய தொடர்களில் வெற்றிகளை பெற்று தர முடியவில்லை. அதனால் எந்த மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படாத நிலைமையில் பெரும்பாலும் காயம் மற்றும் பணிச்சுமையால் ஓய்வெடுக்கும் அவரால் வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக கடுப்பாகியுள்ள பிசிசிஐ ஏற்கனவே பாண்டியவை டி20 கேப்டனாக அறிவித்து விட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையே ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுக்கு கடைசி கேப்டன்ஷிப் வாய்ப்பு என்பதை சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை அதிரடியாக நீக்கிய போதே ரோகித் சர்மாவிடம் சொல்லி விட்டது. எனவே மேற்கொண்டு கேப்டனாக நீடிக்க சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ரோகித் சர்மா இந்த இலங்கை ஒருநாள் தொடரில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 90% எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிசப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை கழற்றி விட்டுள்ள ரோகித் சர்மா கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். சொல்லப்போனால் வங்கதேச ஒருநாள் தொடரில் காயம் என்ற பெயரில் கழற்றி விடப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ராகுல் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். ஆனால் அடுத்து நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரில் தமக்கு காயம் எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ரிசப் பண்ட் விளையாடினார்.

எனவே 2023 உலக கோப்பையில் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவதற்கான வேலையை ரோகித் சர்மா ஏற்கனவே துவங்கியுள்ளார். இந்த முடிவால் ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அல்லது ஆல் ரவுண்டரை பயன்படுத்தும் நிலைமை இந்திய ஒருநாள் அணியில் உருவாகியுள்ளது. மேலும் ரிசப் பண்ட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 5 சதங்கள் உட்பட 1760 ரன்களை 44.00 என்ற சராசரியில் எடுத்துள்ள ராகுல் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இல்லையென்றாலும் தரமான வீரராக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்கவீடியோ : தோனி ஸ்டைலில் தலைகீழாக ஒன்றல்ல 2 மேஜிக் ரன் அவுட் செய்த நேபாள் வீரர் – வர்ணனையாளர்கள் பாராட்டு

எனவே இது நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் வங்கதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து விக்கெட் கீப்பிங் செய்ததால் கேட்ச் தவற விட்ட ராகுல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் அடுத்த வரும் தொடர்களில் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட்டால் அந்த தவறுகள் குறைந்து விடும் என்று நம்பலாம். அதற்குள் அவரும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையிலேயே ரோகித் சர்மாவும் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement