வீடியோ : தோனி ஸ்டைலில் தலைகீழாக ஒன்றல்ல 2 மேஜிக் ரன் அவுட் செய்த நேபாள் வீரர் – வர்ணனையாளர்கள் பாராட்டு

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் வரலாறு கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக போற்றப்படுகிறார். ஏனெனில் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி அழுத்தமான முக்கிய தருணங்களில் சரியான முடிவுகளை எடுத்த அவர் 2007 டி20 உலக கோப்பை, 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் ரிக்கி பாண்டிங்கையும் மிஞ்சிய அவர் 2010 டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றிய பெருமையும் கொண்டவர்.

அத்துடன் நிறைய தோற்க வேண்டிய போட்டிகளில் நங்கூரமாக நின்று கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகரமாக பினிஷிங் செய்யும் யுக்தியை கிரிக்கெட்டில் பிரபலப்படுத்திய அவர் மிகச் சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். அதே போல் 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் கண்டிப்பாக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றி அமைத்தார்.

- Advertisement -

தோனி போலவே:
அப்படி பல பரிணாமங்களைக் கொண்ட அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஒரு இன்ச் காலை வெள்ளைக் கோட்டுக்கு வெளியே அல்லது காற்றில் தூக்கினாலும் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்கக்காரா ஆகியோரை முந்தி உலக சாதனை படைத்துள்ள அவர் நிறைய தருணங்களில் பார்க்காமலேயே பந்தை பிடித்து பின்புறத்தில் இருந்து ஸ்டம்ப்புகளை அடித்து ரன் அவுட் செய்வது உட்பட விக்கெட் கீப்பிங் செய்வதில் வரலாறு காணாத புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

2016 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஒற்றை க்ளவுசை கழற்றி விட்டு அவர் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்த ரன் அவுட் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதனால் உலகம் முழுவதிலும் அவரை நிறைய இளம் வீரர்கள் பின்பற்றும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் பிரபல உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரு பந்தில் எதிரணி பேட்ஸ்மேன்ட்கள் வேகமாக சிங்கிள் எடுக்க முயற்சித்தனர்.

- Advertisement -

அப்போது விரைவாக பந்தை எடுத்த ஃபீல்டர் சரியான த்ரோ செய்யாமல் சற்று தள்ளி எறிந்தார். ஆனால் அதை தாவி பிடித்த நேபாள் நாட்டின் விக்கெட் கீப்பர் அர்ஜுன் சௌட் பிடித்த வாக்கிலேயே திரும்பி ஸ்டம்ப்களையும் பார்க்காமல் ஒரு காலை தூக்கியவாறு தலைகீழாக காற்றில் பல்டி அடித்தவாறு ஸ்டம்ப்களை அடித்தார். அவரது கண்ணிமைக்கும் நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை தொடத் தவறியதால் ரன் அவுட்டாகி சென்றார்.

அந்த தருணத்தைப் பார்த்து ரசிகர்கள் வியந்ததைப் போலவே ஆச்சரியமடைந்த வர்ணையாளர்கள் “இளம் மனிதரே நீங்கள் எம்எஸ் தோனியை பெருமையடைய வைத்து விட்டீர்கள்.  இது அபாரமான விக்கெட் கீப்பிங்” என்று மனதார பாராட்டினார். அதோடு நிறுத்தாமல் அடுத்த சில பந்துகளில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்த மற்றொரு பேட்ஸ்மேன் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்தை தட்டுத் தடுமாறி பிடித்த ஃபீல்டர் விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். இம்முறை வெள்ளை கோட்டுடின் முன்பகுதியில் வந்த அர்ஜுன் சௌட் கச்சிதமாக பிடித்து பேட்ஸ்மேன் டைவ் அடிக்கப் போகிறார் என்பதை உணர்ந்து திரும்பி பார்க்காமலேயே பந்தை சரியாக ஸ்டம்ப்புகள் மீது அடித்தார்.

இதையும் படிங்கரோஹித்துக்கு காயம் அது ஓகே. ஆனா கோலி ஏன் இலங்கை தொடரில் ஆடல தெரியுமா? – வெளியான தகவல்

அதனால் மீண்டும் பேட்ஸ்மேன் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் அவரது திறமையை பார்த்து வியந்த வர்ணனையாளர் “இது மேஜிக் நிறைந்த விக்கெட் கீப்பிங்” என்று மீண்டும் பாராட்டினார். மொத்தத்தில் தோனி ஸ்டைலில் அவரையும் மிஞ்சும் அளவுக்கு செயல்பட்ட நேபாள் விக்கெட் கீப்பரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement