போன மேட்ச்ல ரன்ஸ் வழங்கினாலும்.. இப்போ கம்பேக் கொடுக்க அதை செஞ்சேன்.. ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி

Mohammed Siraj 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து முதல் முறையாக அந்நாட்டில் டெஸ்ட் தொடரை சமன் செய்து தங்களை நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்து புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

கேப் டவுன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்காவை வெறும் 55 ரன்கள் சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா நன்ரே, பர்கர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

கம்பேக் சாதனை:
அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடிய தென்னாபிரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 103 ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 79 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 28, ரோகித் சர்மா 17* ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி முதல் இன்னிங்சில் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய சிறந்த டெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்த முகமது சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கியதால் கடினமாக உழைத்து இம்முறை சரியான லென்த்தை பின்பற்றியதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்க முடிந்ததாக சிராஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் இது என்னுடைய சிறந்த பந்து வீச்சாகும். நான் சரியான இடத்தில் பந்தை தொடர்ச்சியாக அடிக்க முயற்சித்தேன். கடந்த போட்டியில் அதை தொடர்ந்து நான் செய்யாத காரணத்தாலேயே ரன்களை வாரி வழங்கினேன். ஆனால் இந்த போட்டியில் கடினமாக உழைத்து என்னுடைய லென்த்தில் கவனம் சிதறாமல் செயல்பட்டேன்”

இதையும் படிங்க: 13 வருடங்கள்.. சரித்திரம் தவறினாலும் தெ.ஆ மண்ணில் இந்தியா தலை நிமிரும் சாதனை படைத்தது எப்படி

“பும்ராவும் நானும் இணைந்து விளையாடும் போது அவர் ஆரம்பத்திலேயே பிட்ச் எப்படி இருக்கிறது என்ற செய்தியை கண்டுபிடித்து விடுவார். அந்த வகையில் நாங்கள் இருவரும் சேர்ந்து பிட்ச்சை விரைவாக அலசி விடுவோம். முதல் போட்டியில் தோற்றும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்” என்று கூறினார்.

Advertisement