13 வருடங்கள்.. சரித்திரம் தவறினாலும் தெ.ஆ மண்ணில் இந்தியா தலை நிமிரும் சாதனை படைத்தது எப்படி

IND vs RSA 2nd Test
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் தங்கள் நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முதல் முறையாக வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்யும் முனைப்புடன் ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணிக்கு வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் முகமது சிராஜ் 6, பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 39, சுப்மன் கில் 36, விராட் கோலி 46 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 153/4 என்ற நிலையில் இருந்தது.

- Advertisement -

அசத்திய இந்தியா:
ஆனால் அடுத்த 11 பந்துகளில் 1 ரன் கூட கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை 153 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நிகிடி, நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா மீண்டும் தரமான இந்தியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடிந்தளவுக்கு போராடி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு கடைசி போட்டியில் விளையாடிய கேப்டன் டீன் எல்கர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஐடன் மார்க்கம் அதிரடியாக விளையாடி சதமடித்து 106 (103) ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இறுதியில் 79 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 6 பவுண்டரியை 28 (23) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்து பர்கர் வேகத்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாட முயற்சித்து 10 (11) ரன்களில் ரபாடா வேகத்தில் அவுட்டானதை போல விராட் கோலியும் 12 (11) ரன்களில் மார்கோ யான்சென் வேகத்தில் வீழ்ந்தார்.

இதையும் படிங்க: ஃபிரீயா கொடுக்க முடியாது.. வேணும்னா கேளுங்க.. ஐசிசி மாற்றப் போகும் முக்கிய விதிமுறை

இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 17*, ஸ்ரேயாஸ் ஐயர் 4* ரன்கள் எடுத்ததால் 80/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 13 வருடங்கள் கழித்து சாவலான தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் 2010/11ஆம் ஆண்டு 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்த இந்தியா அதன் பின் சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்தி குறைந்தபட்சம் சமன் செய்து தலை நிமிர்ந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement