ஃபிரீயா கொடுக்க முடியாது.. வேணும்னா கேளுங்க.. ஐசிசி மாற்றப் போகும் முக்கிய விதிமுறை

ICC Stumping
- Advertisement -

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப சர்வதேச கிரிக்கெட்டில் தேவைப்படும் புதிய மாற்றங்களை ஐசிசி செய்வது வழக்கமாகும். குறிப்பாக கிரிக்கெட் போட்டியை சிறந்த வழியில் நடத்துவதற்கு அவ்வப்போது அடிப்படை விதிமுறைகளில் புதிய மாற்றங்களை ஐசிசி செய்வது வாடிக்கையாக்கும். அந்த வரிசையில் தற்போது பேட்ஸ்மேன் கொடுக்கும் கேட்ச் மற்றும் ஸ்டம்ப்பிங் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யும் முடிவில் ஐசிசி புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.

அதாவது பொதுவாக ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் தடுமாறி வெள்ளைக் கோட்டை விட்டு வெளியேறும் போது விக்கெட் கீப்பர்கள் ஸ்டம்பிங் செய்து ரிவியூ எடுக்காமலேயே அவுட் கேட்பார்கள். அதன் பின் 3வது நடுவர் அதை சோதிக்கும் போது முதலில் பேட்ஸ்மேன் எட்ஜ் எதுவும் கொடுத்துள்ளாரா என்பதை பார்ப்பதற்கு ஸ்னிக்கோ மீட்டரை பயன்படுத்தி ஒருமுறை உறுதி செய்து கொள்வார்.

- Advertisement -

இலவசம் கிடையாது:
அதன் பின்பு தான் பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு காலை வெளியேற்றியுள்ளாரா அல்லது காற்றில் கால் இருக்கிறதா என்பதை பார்த்து அந்த சமயத்தில் விக்கெட் கீப்பர் சரியாக பெய்ல்ஸை நீக்கியுள்ளாரா என்பதை சாட்சியாக வைத்து 3வது நடுவர் தீர்ப்பு வழங்குவது தற்சமயத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சில தருணங்களில் பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்தாரா என்பதை உறுதி செய்வதற்காக வேண்டுமென்றே ஸ்டம்பிங் செய்து அவுட் கேட்டார்.

எனவே இனிமேல் எந்த ஒரு போட்டியிலும் ஸ்டம்பிங் முறையில் விக்கெட் கீப்பர் அவுட் கேட்கும் போது பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்தாரா என்பதை 3வது நடுவர் ஸ்னிக்கோ மீட்டரில் சோதிக்க மாட்டார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மாறாக கால் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே இருக்கிறதா என்பதை மட்டுமே பக்கவாத பகுதியில் சோதிப்பார்கள் எனக் கூறியுள்ளது. இப்படி செய்வதால் ஸ்டம்ப்பிங்கை சோதிக்கும் போது பேட்ஸ்மேன் கேட்ச் கொடுத்தாரா என்பதை எந்த அணியாலும் இலவசமாக சோதித்து பார்த்துக் கொள்ள முடியாது என்று ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

ஒருவேளை பேட்ஸ்மேன் கீப்பரிடம் எட்ஜ் வழங்கினாரா என்பதை பார்க்க விரும்பினால் அதற்கு அந்த அணி தனியாக ரிவ்யூ எடுக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தலையில் காயமடையும் வீரருக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் வீரர் புதிதாக உள்ளே வந்து பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்தையும் செய்யலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: 17 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. தெ. ஆ அணியை அவமானத்திலிருந்து காப்பாற்றிய மார்க்கம்.. இந்தியாவுக்கு சவாலான டார்கெட்

ஆனால் இனிமேல் அப்படி சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வரும் வீரர் ஒருவேளை விதிமுறையை மீறிய ஆக்சனை கொண்டிருப்பதற்காக தடை பெற்றிருக்கும் பட்சத்தில் பந்து வீச அனுமதிக்கப்படாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வீரர் காயமடையும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 4 நிமிடத்திற்குள் முதலுதவி செய்து முடிக்க வேண்டும் என்ற விதிமுறையையும் ஐசிசி உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement