17 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. தெ. ஆ அணியை அவமானத்திலிருந்து காப்பாற்றிய மார்க்கம்.. இந்தியாவுக்கு சவாலான டார்கெட்

Aiden Markram 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கியது. அதில் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து குறைந்தபட்சம் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. மறுபுறம் ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி 55 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6, பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதிரடி மார்க்ரம்:
குறிப்பாக 153/4 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா கடைசி 6 விக்கெட்டுக்கு 1 ரன் கூட எடுக்காமல் எடுக்காமல் மோசமான சாதனை படைத்த நிலையில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்றது. கேப்டன் டீன் எல்கர் 12, டோனி டீ ஜோர்சி 1, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டான நிலையில் களத்தில் இருந்த ஐடன் மார்க்ரம் தொடர்ந்து இன்று துவங்கிய 2வது நாளில் இந்தியாவுக்கு தொடர்ந்து சவாலை கொடுத்தார்.

ஆனாலும் எதிர்ப்புறம் பேடிங்கம் 11, கெய்ல் வேர்ரின் 9, மார்கோ யான்சென் 11, கேசவ் மகாராஜ் 3 என அடுத்து வந்த வீரர்கள் பும்ரா வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஐடன் மார்க்கம் நேரம் செல்ல செல்ல ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக விளையாடி 17 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 106 (103) ரன்களை 102.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதிலிருந்து காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் அடுத்து வந்த வீரர்களையும் அவுட்டாக்கி உணவு இடைவெளிக்குள் தென்னாப்பிரிக்காவை 176 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, முகேஷ் குமார் 2 விக்கெட்களை எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இப்போட்டியில் வென்று குறைந்தபட்சம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்ய 79 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: டாஸ் வென்று தென்னாப்பிரிக்க கேப்டன் எடுத்த அந்த முடிவு எனக்கு ஆச்சரியமா இருந்தது – சுனில் கவாஸ்கர் வியப்பு

இருப்பினும் இப்போட்டி நடைபெறும் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் இந்த சிறிய இலக்கை சேசிங் செய்வதே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சொல்லலாம். குறிப்பாக நேற்று கடைசி 6 விக்கெட்டுக்கு 1 ரன் கூட எடுக்க முடியாத அளவுக்கு தென்னாப்பிரிக்காவின் பவுலிங் நன்றாகவே இருக்கும் நிலையில் இந்த இலக்கை துரத்துவதற்கு இந்தியா மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement