டாஸ் வென்று தென்னாப்பிரிக்க கேப்டன் எடுத்த அந்த முடிவு எனக்கு ஆச்சரியமா இருந்தது – சுனில் கவாஸ்கர் வியப்பு

Gavaskar-and-Elgar
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிரான நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியது.

அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்கிற நிலையில் ஜனவரி 3-ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

- Advertisement -

இப்படி குறைந்த ரன்களில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 153 ரன்கள் குவித்தது. பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்று முதலில் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர்முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியமாக இருந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

நேற்றைய போட்டியில் எல்கர் டாஸ் வென்றதும் மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு நிச்சயம் தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசும் என்று அறிவிப்பார் என எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே முதல் போட்டியின் போது இந்திய அணியை மூன்றே நாட்களில் சுருட்டி இருந்தனர். எனவே நிச்சயம் இந்த வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்தி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைப்பார்கள் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் அவர் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் எப்படி இந்த முடிவை எடுத்தார் என்று எனக்கு புரியவில்லை. ஏனெனில் இரண்டாவது போட்டியிலும் புதிய ஆடுகளம் வழங்கப்படும் போது எவ்வாறு அந்த மைதானம் செயல்படும் என்று கணிக்க முடியாத நிலையில் அவர்கள் பேட்டிங்கை தேர்வு செய்தார்கள்.

இதையும் படிங்க : என்னய்யா பகல் பித்தலாட்டமா இருக்கு? ஏமாற்றப்பட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளிப்பு.. நடந்தது என்ன

அதேபோன்று தென்னாப்பிரிக்க அணியிடம் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அவர்களுக்கு முதலில் பந்துவீச வாய்ப்பினை வழங்கி இருக்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான பிறகு மீண்டும் வந்து எவ்வாறு அந்த தொடரை கைப்பற்றியதோ அதேபோன்று தற்போது தென்னாப்பிரிக்க மண்ணிலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement