என்னய்யா பகல் பித்தலாட்டமா இருக்கு? ஏமாற்றப்பட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளிப்பு.. நடந்தது என்ன

Shan Masood
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் குறைந்தபட்சம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த சூழலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் கடுமையாகப் போராடி 313 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 116/2 ரன்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. அந்த அணிக்கு கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் 37, உஸ்மான் கவாஜா 47 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 23*, ஸ்டீவ் ஸ்மித் 6* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

பகல் பித்தலாட்டம்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு மிட்சேல் மார்ஷ் வீசிய 26வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் ஷான் மசூத் எட்ஜ் கொடுத்து கேட்ச் வழங்கி அவுட்டானார். அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை கொண்டாடிய போதிலும் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே காலை வைத்து மார்ஷ் பந்து வீசியதால் அம்பயர் நோ-பால் வழங்கியது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அப்போது எந்தளவுக்கு மார்ஷ் நோ-பால் வீசினார் ரசிகர்களுக்காக மைதானத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பி காட்டியது. அதில் மார்ஷ் வெள்ளைக்கோட்டை விட்டு நன்றாகவே காலை வெளியே வைத்து வீசினார். மேலும் அவருடைய அருகில் எதிர்ப்புறம் மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் இருந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்த தவறிய ஷான் மசூட் மீண்டும் மார்ஷ் வீசிய 30வது ஓவரின் 3வது பந்தில் அதே போல எட்ஜ் வழங்கி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை கொண்டாடிய நிலையில் இம்முறை மார்ஷ் நோ-பால் வீசாமல் சரியாக வீசுயுள்ளாரா என்பது மீண்டும் பெரிய திரையில் காட்டப்பட்டது. ஆனால் அங்கே பந்து வீசிய மார்ஷ்க்கு அருகில் எதிர்ப்புற பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வான் இருக்க வேண்டிய இடத்தில் ஷான் மசூட் இருந்தது தற்போது பாகிஸ்தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: பாத்ரூம் போய்ட்டு வந்து பாத்தா.. இந்திய அணி பற்றி வைரலாகும் ரவி சாஸ்திரியின் நேரலை வர்ணனை

அதாவது பந்தை எதிர்கொண்ட மசூட் எப்படி எதிர்புறத்தில் இருக்க முடியும் என்று கொந்தளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் 2வது முறையும் மார்ஷ் நோ-பால் வீசியதை மறைப்பதற்காகவே ஆஸ்திரேலியா தங்களை ஏமாற்றி இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக விமர்சித்து வருகின்றனர். இந்த தருணத்தை நடுவர்களும் கொண்டு கொள்ளாததால் என்னய்யா பகல் பித்தலாட்டமா இருக்கு என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement