பாத்ரூம் போய்ட்டு வந்து பாத்தா.. இந்திய அணி பற்றி வைரலாகும் ரவி சாஸ்திரியின் நேரலை வர்ணனை

Ravi Shastri 4
- Advertisement -

தென் ஆப்பிரிக்க மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் நெருப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் சவாலான பிட்ச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3, ரபாடா 3, லுங்கி நிகிடி 3 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

கலாய்த்த ரவி சாஸ்திரி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் ஐடன் மார்க்ரம் 36*, டேவிட் பேடிங்கம் 7* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலைமையில் இன்னும் அந்த அணி 36 ரன்கள் பின் தங்கியுள்ளதால் பேட்டிங்க்கு சவாலான மைதானத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம்.

முன்னதாக இப்போட்டியில் 55 ரன்களுக்கு வலுவான தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்ததால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதன் பின் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 39, கில் 35, விராட் கோலி 46, ராகுல் 8 ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன்கள் எடுத்தார்கள். எஞ்சிய 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டான நிலையில் முகேஷ் குமார் 0* ரன்களில் அவுட்டாகவில்லை.

- Advertisement -

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 7 ஜீரோ ரன்களை பதிவு செய்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்தது. அதை விட விராட் கோலியின் போராட்டத்தால் ஒரு கட்டத்தில் 153/4 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதையும் படிங்க: தெ.ஆ அணியின் வெற்றிக்கு குறுக்கே அவர் தான் இருப்பாரு.. இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

அந்த தருணத்தை காந்த குரல் நாயகன் ரவி சாஸ்திரி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் கலாய்க்கும் வகையில் வர்ணித்தது பின்வருமாறு. “153/4 என்ற நிலையிலிருந்து 153க்கு ஆல் அவுட். ஒருவேளை இங்கே யாராவது பாத்ரூமுக்கு சென்றிருந்தால் அவர்கள் மீண்டும் வரும் போது இந்தியா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது” என்று பேசியது வைரலாகி வருகிறது.

Advertisement