அஸ்வின் வேற இல்ல.. போன மேட்ச்ல டிவியில் அவரோட பவுலிங்கை பாத்து போட்டேன்.. சிராஜ் பேட்டி

Mohammed Siraj
- Advertisement -

ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் பஸ்பால் ஆட்டத்தை விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற நிலையில் வலுவாக இருந்தது.

ஆனால் அப்போது சுதாரிப்புடன் செயல்பட்ட இந்திய பவுலர்கள் அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை 319 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். குறிப்பாக பாதியிலேயே வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, ரவீந்திர ஜடேஜா 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்து முன்னிலை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

4 பொறுப்பான பவுலர்கள்:
அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 19 ரன்களில் அவுட்டானாலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் அபாரமாக விளையாடி சதமடித்து 104* ரன்கள் எடுத்தார். இருப்பினும் தசை பிடிப்பு காயத்தால் பாதியிலேயே வெளியேறிய அவருடன் பேட்டிங் செய்த சுப்மன் கில் தனது பங்கிற்கு 65* ரன்கள் எடுத்துள்ளார்.

அதனால் மூன்றாவது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 322 ரன்கள் பெற்று வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அஸ்வின் இல்லாததால் 4 பவுலர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக முகமது சிராஜ் கூறியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் விளையாடாத தாம் தொலைக்காட்சியில் பும்ராவின் பவுலிங்கை பார்த்து இப்போட்டியில் அசத்தியதாகவும் சிராஜ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் 3வது நாள் முடிவில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் 4 பவுலர்கள் மட்டுமே இருப்பதால் எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இங்கிலாந்து எங்களை அட்டாக் செய்யும் என்பதை நாங்கள் அறிவோம். அதே சமயம் நாங்கள் ஒன்றாக செயல்பட்டால் அவர்களும் தவறு செய்வார்கள் என்பதை அறிந்து செயல்பட்டோம். எனவே நாங்கள் பெரிய அளவில் எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம்”

இதையும் படிங்க: 322 ரன்ஸ்.. 3வது நாளில் ஆட்டத்தை மாற்றி பாதியிலேயே வெளியேறிய ஜெய்ஸ்வால்.. மீண்டும் பேட்டிங் செய்வாரா?

“யார்க்கர் வீசுவது விக்கெட் எடுப்பதற்கான சிறந்த வழி என்பதை நான் அறிவேன். ஒரு ஓவரில் 6 டாட் பந்துகள் வீசுவது ஒரு பவுலருக்கு முக்கியமானதாகும். ஆனால் அது மிகவும் கடினமாகும். கடந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நான் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். குறிப்பாக பும்ராவின் யார்க்கர் பந்துகளை ரசித்து பார்த்தேன். அதை மனதில் வைத்து இன்று என்னுடைய பந்து வீச்சில் நான் செயல்படுத்தினேன்” என்று கூறினார்.

Advertisement