IND vs RSA : காயமடைந்து வெளியேறிய ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பதிலாக மாற்றுவீரர் இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

IND Japrit Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Bumrah 1

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அந்த முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. திருவனந்தபுரம் சென்றடைந்த அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது முதுகு பகுதியில் அசவுகரியத்தை சந்தித்ததாக அணி மருத்துவர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அதன் பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவரது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்தது. எனவே அவர் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்றும் டி20 உலக கோப்பையிலும் அவர் விளையாட மாட்டார் என்று நேற்று தகவல் வெளியாகியது.

siraj

பும்ரா இப்படி காயம் அடைந்து இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ள வேளையில் மிக விரைவாக பும்ராவிற்கு மாற்று வீரரை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிராஜை பும்ராவிற்கு பதிலாக அறிவித்துள்ளது இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் அறிமுகமாகி முன்னதாகவே ஓய்வு பெற்ற 10 இந்திய ஸ்டார்களின் பட்டியல்

இன்னும் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் பும்ராவின் இடத்தை நிரப்புப்போவது யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்சமயத்திற்கு மட்டுமே பும்ராவின் இடத்தை சிராஜ் நிரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. சிராஜின் இந்த சேர்க்கை மூலம் உலககோப்பை அணியில் பும்ராவிற்கு மாற்றுவீரராக தேர்வுசெய்யப்பட ஷமி மற்றும் தீபக் சாகர் ஆகியோருடன் இவரும் போட்டியில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement