சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் அறிமுகமாகி முன்னதாகவே ஓய்வு பெற்ற 10 இந்திய ஸ்டார்களின் பட்டியல்

Dravid
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை 2007க்குப்பின் வெல்லும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாறினாலும் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்க கொடுத்த வாய்ப்பை பொன்னாக ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். இடையே ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்ஷிப் திறமைகளை வெளிப்படுத்தி 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக ஜொலிக்கிறார்.

INDIA IND vs ENG Rohit Sharma

- Advertisement -

அப்படி பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ள அவர் கடந்த 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி இன்று டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரைப்போலவே இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் அவருக்குப் பின் அறிமுகமான நட்சத்திரங்கள் சுமாரான செயல்பாடுகள் அல்லது வயது காரணமாக அவருக்கு முன்பாகவே ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

10. சுதீப் தியாகி: ஐபிஎல் 2009 தொடரில் சென்னைக்காக சிறப்பாக செயல்பட்ட இவர் அதே வருடம் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். ஆனால் அதில் சுமாராக செயல்பட்டு அதற்கடுத்த வருடங்களில் ஐபிஎல் தொடரிலும் சோடை போனதால் அதுவே அவருடைய கடைசி போட்டியாகவும் அமைந்து 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

9. ராகுல் சர்மா: உயரமான சுழற்பந்து வீச்சாளரான இவர் 2012இல் அறிமுகமாகி 2 போட்டியில் மட்டும் விளையாடிய நிலையில் மேற்கொண்டு வாய்ப்பு வரவில்லை. கிடைத்த வாய்ப்புகளிலும் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படாத இவர் இந்த வருடம் ஓய்வு பெற்று லெஜெண்ட்ஸ் தொடரில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

8. வினாய் குமார்: 2010 டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2012 வரை 9 போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடினார். அதில் 10 விக்கெட்டுகளை 7.84 என்ற எக்கனாமியில் எடுத்த போதிலும் இன்னும் தரமான பந்துவீச்சாளர்களை தேடிய பயணத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர் 2021இல் ஓய்வு பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Yusuf 2

7. யூசுப் பதான்: ரோகித் அறிமுகமான அதே உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் அறிமுகமான இவர் தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்தார். ஆல்-ரவுண்டராக 2007, 2011 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் தொடர்ச்சியாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் 22 போட்டிகளுடன் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021இல் ஓய்வை அறிவித்தார்.

- Advertisement -

6. முரளி கார்த்திக்: தமிழக வீரரான இவர் 2007இல் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமாகி 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 24 ரன்களைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் ஜடேஜா, அஸ்வின் போன்றோர் பக்கம் கேப்டன் தோனி திரும்பியதால் அறிமுகப் போட்டியே அவருடைய கடைசி போட்டியாகவும் அமைந்தது. அதனால 2015இல் ஓய்வு பெற்ற அவர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

Praveen-Kumar

5. பிரவீன் குமார்: 2008இல் அறிமுகமாகி நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்த இவர் 10 டி20 போட்டிகளில் விளையாடி 2011 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தும் கடைசி நேரத்தில் காயத்தால் விலகினார். அந்த காயம் அவருடைய கேரியரை மொத்தமாக பாதித்ததால் பழைய பன்னீர்செல்வமாகச் செயல்பட முடியாத அவர் 2018ல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

4. பிராகியன் ஓஜா: 2009 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் ஜடேஜா, அஸ்வின் போன்றவர்களின் வருகையாலும் சுமாரான செயல்பாடுகள் காரணமாகவும் 2010க்குப்பின் வாய்ப்பு பெறவில்லை. அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இவர் 2020இல் ஓய்வு பெற்றார்.

parthiv

3. பார்திவ் படேல்: 2011இல் அறிமுகமாகி இந்தியாவுக்காக 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் தோனி எனும் ஜாம்பவான் இருந்ததால் அதிகப்படியான வாய்ப்புகளை பெறாமல் 2020இல் ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளர் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

2. ஆஷிஷ் நெஹ்ரா: மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2009இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2017 வரை 27 போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு நியூசிலாந்துக்கு எதிராக வழியனுப்பும் போட்டியுடன் ஓய்வு பெற்றார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடம் குஜராத் அணியுடன் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளராக சாதனை படைத்துள்ளார்.

dravid 1

1. ராகுல் டிராவிட்: இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் இவரது கடைசி காலத்தில் டி20 கிரிக்கெட் வந்ததுடன் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்பட்டதால் 2011இல் தான் இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்த அவருக்கு அதுவே கடைசி போட்டியாக அமைந்தது. அதன்பின் ஐபிஎல் தொடரில் சிலகாலம் விளையாடி ஓய்வடைந்த அவர் தற்போது இந்தியாவுக்கும் ரோஹித் சர்மாவுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Advertisement