வீடியோ : தப்பு தான் மன்னிச்சுடுயா, களத்தில் செய்த தவறுக்காக சக வீரரிடம் மன்னிப்பு கேட்ட சிராஜ் – நடந்தது என்ன

Mahipal Lomrar Siraj
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. அந்த வரிசையில் ஏப்ரல் 23ஆம் தேதி தங்களுக்கு சொந்த ஊரில் விராட் கோலி தலைமையில் நடைபெற்ற 32வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி 4வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு டு பிளேஸிஸ் 62 (39) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 77 (44) ரன்களும் எடுத்த அதிரடியில் 20 ஓவர்களில் 189/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 47 (37), படிக்கல் 52 (34), துருவ் ஜுரேல் 34* (16) என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து போராடிய ஜோஸ் பட்லர் 0, கேப்டன் சஞ்சு சாம்சன் 22, ஹெட்மயர் 3 என கருப்பு குதிரை பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த ஹர்ஷல் படேலை விட முதல் ஓவரிலேயே ஜோஸ் பட்லரை டக் அவுட்டாக்கிய முகமது சிராஜ் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

தப்பு தான் மன்னிச்சுடுயா:
முன்னாதாக அந்தப் போட்டியில் முகமது சிராஜ் 19வது ஓவரை வீசிய கடைசி பந்தை துருவ் ஜுரேல் அதிரடியாக எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது நேராக சென்ற அந்த பந்தை பெங்களூரு வீரர் மஹிபால் லோம்ரர் எடுத்து வீசுவதற்குள் ஜுரேல் வெள்ளைக்கோட்டை தொட்டு சிங்கள் எடுத்து விட்டார். அதனால் தாமதமாக ரன் அவுட் செய்த முகமது சிராஜ் கோபத்தில் “ஏன் முன்கூட்டியே பந்தை எடுத்து வீசவில்லை” என்று அவரை பிரபல ஹிந்தி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி வெளிப்படையாக திட்டினார்.

இருப்பினும் உண்மையாகவே அந்த சமயத்தில் முடிந்தளவுக்கு போராடி கச்சிதமாக செயல்பட்டும் சீனியர் வீரரான சிராஜ் அப்படி திட்டியதால் மஹிபால் லோம்ரர் மிகவும் மனமுடைந்ததாக தெரிகிறது. அந்த நிலையில் போட்டி முடிந்ததும் தமது தவறை உணர்ந்து முகமது சிராஜ் என்ன இருந்தாலும் அந்த சமயத்தில் அப்படி திட்டியிருக்க கூடாது என்று மனம் வருந்தி நேரடியாக அவரிடம் 2 முறை மன்னிப்பு கேட்டார். இது பற்றி ஆர்சிபி வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சமயத்தில் நான் மிகவும் கோபமாக இருந்தேன். அதனால் அவருடைய பெயர் என்ன மஹிபால். உங்களிடம் தற்போது அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இத்துடன் சேர்த்து அவரிடம் 2 முறை மன்னிப்பு கேட்டு விட்டேன். ஏனெனில் களத்தில் நிகழும் சில பதற்றமான நிகழ்வுகளை நான் களத்திற்கு வெளியே எடுத்து வருவதில்லை. அவர் அனைத்தும் போட்டி முடிந்ததும் அமைதியாகி விட வேண்டும்” என்று கூறினார். பொதுவாக சாதாரண விக்கெட் விழுந்தால் கூட அதை வெறித்தனமாக கொண்டாடும் விராட் கோலியுடன் சேர்ந்து கொண்டு முகமது சிராஜ் தன்னுடைய பங்கிற்கு வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கமாகும்.

அந்த நிலைமையில் இந்த போட்டியில் தமக்கு மிகவும் பிடித்த விராட் கோலி மீண்டும் கேப்டனாக செயல்பட்ட சுதந்திரத்தில் முகமது சிராஜ் சற்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்த சமயத்தில் கோபத்தை வெளிப்படுத்தி விட்டார் என்றே சொல்லலாம். இருப்பினும் அதற்காக மன்னிப்பு கேட்ட அவரை பெங்களூரு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க:RCB vs RR : இதுலதான் நான் ஸ்பெஷலே. ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் பேட்டி

இதை தொடர்ந்து தற்போது 5வது இடத்தில் இருந்து வரும் பெங்களூரு அணியில் ரன் ரேட் இன்னும் பலவீனமாகவே இருந்து வருகிறது. எனவே அதை அதிகரித்து டாப் 4 இடத்திற்குள் நுழைய போராட்ட காத்திருக்கும் அந்த அணி அடுத்ததாக ஏப்ரல் 26ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தங்களுடைய அடுத்த போட்டியில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement