RCB vs RR : இதுலதான் நான் ஸ்பெஷலே. ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் பேட்டி

Maxwell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

RCB

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி துவக்கத்திலேயே 12 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறினாலும் மூன்றாவது விக்கெட் ஜோடி சேர்ந்த டூப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அவர்களின் இந்த அருமையான பாட்னர்ஷிப் காரணமாக பெங்களூரு அணி பெரிய ரன் குவிப்பிற்கும் சென்றது. இந்த போட்டியில் 44 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 77 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Glenn Maxwell

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பேட்டிங் குறித்து பேசிய மேக்ஸ்வெல் கூறுகையில் : நான்காம் இடத்தில் விளையாடுவது பற்றி எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்காக நான் அந்த இடத்தில் தான் இறங்கி விளையாடி வருகிறேன். துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் எனக்கு அதிரடியாக விளையாடும் சுதந்திரம் ஆஸ்திரேலியா அணி கொடுத்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று பெங்களூரு அணியும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. இந்த சீசனில் நான் நல்ல ஃபார்முடன் வந்துள்ளதால் என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடிகிறது. இந்த போட்டியில் புதுப்பந்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தாலும் அதன் பிறகு நானும் டூபிளெஸ்ஸிஸ்-சும் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. பவர்பிளேவில் கிடைத்த அந்த பவுண்டேஷனை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : 50வது பிறந்தநாளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்ட உயரிய கெளரவம் – லாராவுக்கும் சமமான அங்கீகாரம்

இந்த மைதானமும் என்னுடைய ஆட்டத்திற்கு ஏற்றார் போல் இருந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. துவக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement