இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்களை எடுக்கப் போவது அவர் தான்.. கௌதம் கம்பீர் பாராட்டு

Gautam Gambhir 6
Advertisement

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் போன்றவர்கள் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்களை விட ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய மிரட்டலான வேகத்தால் எதிரணிகளை அசால்டாக ஆல் அவுட் செய்து இந்தியாவுக்கு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அதில் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்களை எடுத்து 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை தோற்கடிக்க உதவிய அவர் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது 4 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் பங்காற்றினார். அதே வேகத்தில் இலங்கைக்கு எதிராகவும் 5 விக்கெட்களை எடுத்து 55 ரன்களுக்கு சுருட்டுவதற்கு உதவிய அவர் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை சாய்த்த இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்தார்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் பும்ராவை விட ஷமி தான் அதிக விக்கெட்களை எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல உதவுவார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கருப்பு குதிரை பவுலரான பும்ராவை எதிரணி பேட்ஸ்மேன் கவனமாக எதிர்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் ஷமி நிறைய விக்கெட்கள் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷமி அதிக விக்கெட்களை எடுப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் பும்ராவை எதிரணியினர் அட்டாக் செய்ய மாட்டார்கள். குறிப்பாக எதிரணியினர் அதிரடியாக எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அவர் நல்ல பவுலர். பொதுவாகவே நல்ல பவுலர் நிறைய விக்கெட்டுகளை எடுக்க மாட்டார்கள். ஏனெனில் எதிரணியினர் அவர்களுக்கு எதிராக நிதானமாக விளையாடுவார்கள். எடுத்துக்காட்டாக இந்த உலகக் கோப்பையில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் அவரை யாருமே அதிரடியாக எதிர்கொள்ள முயற்சிக்கவில்லை”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா அதை விரும்பல.. நாங்க தான் வற்புறுத்தி செஞ்சோம்.. இப்போ ரிசல்ட்டை பாருங்க.. கங்குலி மகிழ்ச்சி

“அதனால் நிறைய நேரங்களில் நல்ல பவுலர் சிறந்த எக்கனாமியை கொண்டிருந்தாலும் அதிக விக்கெட்களை எடுக்க மாட்டார்கள். எனவே ஷமி அதிக விக்கெட்களை எடுப்பார் என்று கருதுகிறேன். ஏனெனில் பும்ராவை நிதானமாக விளையாடும் எதிரணிகள் கண்டிப்பாக அவரை அட்டாக் செய்தாக வேண்டும். பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டு வீரர். அவரைப் போன்றவர் இந்திய அணிக்கு அவசியம். ஆனால் ஷமி அதிக விக்கெட்களை எடுப்பார்” என்று கூறினார்

Advertisement