ஃபைனலில் விராட், ரோஹித்தை விட அவர் தான் எங்களுகளுக்கு பெரிய சவாலா இருப்பாரு.. கேப்டன் கமின்ஸ் ஓப்பன்டாக்

Pat Cummins 4
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளின் முடிவில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை பதிவு செய்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி தங்களுடைய 6வது உலகக் கோப்பையை வெல்வதற்காக களமிறங்குகிறது. இருப்பினும் அதற்கு சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பற்றி உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா மிகப் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் சவால்:
அதே போல முதல் போட்டியில் சென்னையில் முக்கிய காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்று நிச்சயம் அந்த அணி வீரர்கள் தயாராக இருப்பார்கள். இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் முகமது ஷமி தங்களுக்கு ஃபைனலில் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இல்லாத ஷமி இப்போட்டியில் தங்களுக்கு சவாலை கொடுப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதற்கு முன் ஷமியை எதிர்கொண்ட தங்களுடைய பேட்ஸ்மேன்கள் அவருடைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கும் கம்மின்ஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தொடரின் துவக்கத்தில் நாங்கள் எதிர்கொள்ளாத ஒரு வீரர் தற்போது அசத்துகிறார் என்றால் அது முகமது ஷமி. அவர் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சவாலை கொடுக்கக்கூடிய கிளாஸ் பவுலர். எனவே அவர் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். ஆனால் அவரை போன்ற பவுலர்களை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே எதிர்கொண்டு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து இவர்தான் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் – வாசிம் அக்ரம் நம்பிக்கை

அவர் கூறுவது போல இத்தொடரின் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த ஷமி அதன் பின் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அப்போதிலிருந்து எதிரணிகளை தெறிக்க விட்டு செமி ஃபைனலில் எடுத்த 7 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் 2023 கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்து இந்தியாவுக்கு பலம் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement