ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து இவர்தான் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் – வாசிம் அக்ரம் நம்பிக்கை

Wasim-Akram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும்போது எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்? எந்த அணி இறுதியில் கோப்பையை வெல்லும்? என்கிற பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அற்புதமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசிய விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டினார். அதேபோன்று ரோகித் சர்மாவும் இந்த தொடர் முழுவதுமே பயமற்ற அதிரடியான துவக்கத்தை அளித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 35 மற்றும் 36 வயதாகும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என்பதனால் அவர்களது இடத்தை அடுத்ததாக நிரப்பப்போவது யார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் நிலவி வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்து வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் அளித்து வரும் துவக்கம் மிக அற்புதமாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே 150-யை தாண்டி இருப்பதினால் இந்திய அணி வெகுவிரைவாக பெரிய ரன்களை குவிக்க ஆரம்பிக்கிறது. அதேபோன்று விராட் கோலி மிடில் ஓவர்களில் நிலைத்து நிற்பதால் ரன் ரேட் நிலையாக செல்கிறது.

இதையும் படிங்க : கொஞ்சம் தடுமாறுனாலும் 2003 ஃபைனல் ரிப்பீட்டாகலாம்.. எச்சரிக்கையா இருங்க.. யுவி வித்யாச கருத்து

அவர்கள் இருவருக்கு அடுத்து இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக நான் சுப்மன் கில்லை பார்க்கிறேன். ஏனெனில் அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர். தொடர்ச்சியாக ரன் குவிக்கும் அவர் பெரிய இன்னிங்சும் விளையாடும் அளவிற்கு திறன் உடையவர். எனவே இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்து நிச்சயம் சுப்மன் கில் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement