அவரே முன்வந்து ஓய்வு கேட்டதால் தான் அவரை நாங்க வெஸ்ட் இண்டீஸ் டூர்க்கு செலக்ட் பண்ணல – பி.சி.சி.ஐ விளக்கம்

shami-1
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணிகள் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

INDvsWI

- Advertisement -

அதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டதோடு, முகமது ஷமியின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது. அதனால் அவரும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமிக்கு ஏன் இந்த சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி :

Shami

தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வரும் முகமது ஷமி தானே முன்வந்து இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டதாலே அவர் இந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம் பெறவில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை என்றாலும் நிச்சயம் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய முகமது ஷமி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தவற விட்டாலும் டிஎன்பிஎல் தொடரில் அசத்தும் – 3 தரமான தமிழக வீரர்கள்

கடந்த இரு மாதங்களாக ஓய்வின்றி விளையாடி வந்த அவர் தனது ஓய்வுக்காக சொந்த விருப்பம் காரணமாகவே இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement