
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இப்போதெல்லாம் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு நிறைய விதிமுறைகள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது போக ஃபிளாட்டான பிட்ச், சிறிய பவுண்டரிகள் காரணமாக இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்குவதை பார்க்க முடிகிறது.
அந்த சூழ்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுவதற்காக சலிவாவை பயன்படுத்த ஐசிசி அனுமதிக்க வேண்டுமென்று சமீபத்தில் இந்திய வீரர் முகமது ஷமி கேட்டுக்கொண்டார். லாக் டவுன் சமயத்தில் விதிக்கப்பட்ட அந்த தடையை நீக்குமாறு சமீபத்தில் அவர் கேட்டுக்கொண்டது பின்வருமாறு. “நாங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை பெற முயற்சிக்கிறோம். ஆனால் தந்தின் மீது சலிவாவை பயன்படுத்த அனுமதியில்லை”
“அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அப்போது தான் எங்களால் ரிவர்ஸ் நீங்கள் கொண்டு வந்து போட்டியில் சுவாரசியத்தை முடியும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் ஷமி சொல்வது போல மீண்டும் சலிவாவை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் டிம் சௌதீயும் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“லாக் டவுன் சமயங்களில் அந்த விதிமுறை கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாக பவுலர்களுக்கு சாதகம் கிடைப்பதில்லை. அதனாலேயே இப்போதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் 350 ரன்கள் எளிதாக அடிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே போட்டியில் சுவாரசியம் வேண்டுமெனில் பவுலர்களுக்கும் கொஞ்சம் சாதகம் வேண்டும்”
“அதற்கு கொஞ்சம் சலிவா பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார். அதே விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியது பின்வருமாறு. “நம் பந்தின் நிலையை பார்த்தால் அது பின் முனையில் பளபளப்பை இழந்து விட்டது. எனவே சலிவாவை கொஞ்சம் பயன்படுத்தினால் அதை மெருகூட்டி நாம் ரிவர்ஸ் ஸ்விங்கை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்”
இதையும் படிங்க: மழையால் பைனல் மேட்ச் கைவிடப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? – ரூல்ஸ் சொல்வது என்ன?
“அதை செய்வதால் உங்களால் பந்தை பளபளப்பாகி ஸ்விங்கை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானில் இருக்கும் ஃபிளாட் போன்ற பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக டாமினேட் செய்கிறார்கள். எனவே அந்த விதிமுறையில் மாற்றங்கள் செய்வது பவுலர்கள் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த உதவும்” என்று கூறினார். இதற்கு ஐசிசி செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.