- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது? தனது தீர்க்கமான முடிவை அறிவித்த முகமது ஷமி – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் விளையாடிய 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை எடுத்து பிரமாதப்படுத்திய அவருக்கு அந்த தொடரின் போதே கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எப்போது :

இதன் காரணமாக அவர் கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்று விளையாடாமல் இருந்து வருகிறார். அதோடு இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து சென்று தனது கணுக்கால் காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த பல மாதங்களாகவே ஓய்வில் இருந்து வந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தற்போது மீண்டும் பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலந்து கொண்ட முகமது ஷமி தான் எப்போது இந்தியா அணிக்கு திரும்பவேன்? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் கடந்த சில காலமாகவே இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதை அறிவேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முயற்சியில் தான் தற்போது இருந்து வருகிறேன். ஆனாலும் எந்தவித காயமும் இன்றி முழு உடற்தகுதியுடன் நான் அணிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஒருவேளை நான் அவசரப்பட்டு அணிக்கு வந்து மீண்டும் காயமடைந்தால் அது எனக்கு மிகப்பெரிய சிக்கலாகிவிடும். எனவே நான் இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தற்போது பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்து விட்டேன். முழு உடற்தகுதியை எட்டிய பின்னர் நிச்சயம் நான் இந்திய அணிக்கு திரும்புவேன்.

இதையும் படிங்க : இந்திய அணியை வருங்காலத்தில் தாங்கப் போகும்.. 3 வளரும் பேட்ஸ்மேன்கள் இவங்க தான்.. ஆகாஷ் சோப்ரா

அதனால் நான் எப்போதும் மீண்டும் மணிக்கு திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக கூற முடியாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடி என்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்றாலும் அதற்கும் நான் தயார். முழுஉடற்தகுதியை எட்டிய பிறகே மீண்டும் இந்திய அணிக்கு வருவேன் என முகமது ஷமி தீர்க்கமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -