இந்திய அணியை வருங்காலத்தில் தாங்கப் போகும்.. 3 வளரும் பேட்ஸ்மேன்கள் இவங்க தான்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையுடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். தற்போதைய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர்கள் 35 வயதை கடந்து விட்டதால் இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெற உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அடுத்தபடியாக வருங்காலத்தில் இந்திய அணியை சிறப்பாக விளையாடி தாங்கப்போகும் 3 வளரும் பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பெயரிட்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது போல 3 வீரர்கள் உள்ளனர். சுப்மன் கில் வருங்கால சூப்பர்ஸ்டார் போன்றவர். 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடாத அவர் 2023 ஐபிஎல் தொடரில் 900 ரன்கள் அடித்தார். எனவே இளமையாக இருக்கும் அவர் தனது டி20 ஆட்டத்தை முன்னேற்றுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். ரோஹித் சர்மா 2011 உலகக் கோப்பையில் விளையாடவில்லை”

- Advertisement -

3 வருங்கால நாயகர்கள்:

“ஆனால் தற்போது அவர் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுகிறார். அதே போல வரக்கூடிய திறமையை கொண்டுள்ள சுப்மன் போட்டியின் துடிப்பை புரிந்து கொண்டு விளையாடும் மிகப்பெரிய தரத்தை கொண்டுள்ளார். தோனி, விராட் கோலி போன்ற சில வீரர்கள் மட்டுமே போட்டியின் துடிப்பை வேகமாக புரிந்து கொள்வார்கள்”

“அதே போல அவராலும் போட்டி எங்கே செல்கிறது என்பதை 100% புரிந்துக்கொண்டு செயல்பட முடிகிறது. அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் எனும் 2வது பையனை எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல கதையிலிருந்து வந்த அவரின் தலை சரியான இடத்தில் இருக்கிறது. தனது தோள்பட்டைகளை உறுதியாகப் பயன்படுத்தி விளையாடும் அவர் கடினமான உழைப்பாளி. மிகவும் அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் அவர் இந்த இடத்தை போராடித் தொட்டுள்ளார்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் – ரிஷப் பண்ட்:

“3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமையை கொண்டுள்ள அவரிடம் பைத்தியக்காரத்தனமான ஆர்வம் இருக்கிறது. ஏதேனும் தவறினால் கூட அந்த ஆர்வம் அவரை சிறப்பாக விளையாட வைக்கும். அடுத்ததாக ரிஷப் பண்ட். அவரிடம் தனித்துவமான பேட்டிங் திறன் மற்றும் நம்பிக்கை உள்ளது. முதல் முறையாக அவரைப் பார்த்த போது யுவராஜ் மற்றும் ரெய்னா கலந்த கலவையாக எனக்கு தோன்றியது”

இதையும் படிங்க: கெளதம் கம்பீருடன் ஸ்பெஷல் திட்டம்.. பயிற்சியில் சென்னை சேப்பாக்கம் சுவரை உடைத்த விராட் கோலி

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் அசத்தியுள்ள அவரால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தன்னுடைய ஆட்டத்தை மாற்ற முடியும். பலமுறை ஒரு வீரரை ஒரு ஸ்பெல், போட்டி மாற்றியுள்ளதை நாம் பார்த்துள்ளோம்” என்று கூறினார். அந்த வகையில் இந்த 3 பேட்ஸ்மேன்களும் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்களாக திகழ்வார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கணிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement