பெரிய ராக்கெட் சைன்ஸ்லாம் இல்ல. 5 விக்கெட் எடுத்து இலங்கையை கதறவிட்டது இப்படித்தான் – முகமது ஷமி பேட்டி

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நவம்பர் 2-ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு உலககோப்பை தொடரின் 33 ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெகு எளிதாக வீழ்த்தி நீண்ட தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன் பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் கூட முழுவதுமாக விளையாடாமல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது.

- Advertisement -

அந்தவகையில் இலங்கை அணி இந்த போட்டியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேக்கப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 ஓவர்கள் பந்துவீசி 1 மெய்டன் உட்பட 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது ஷமி கூறுகையில் : எங்களுடைய பந்துவீச்சு யூனிட் தற்போது மிகச் சிறப்பான ரிதத்தில் உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவர்களின் விக்கெட்டுகளை கொண்டாடுகிறோம். இப்படி பவுலர்கள் ஒற்றுமையாக இருப்பது மிகவும் அவசியம். எங்களது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருப்பதற்கு காரணம் நாங்கள் அனைவருமே நல்ல ஏரியாவில் பந்து வீசி வருகிறோம்.

- Advertisement -

அதேபோன்று நான் எப்பொழுது பந்து வீச வந்தாலும் நல்ல லைன் மற்றும் நல்ல லென்த்தில் பந்துவீச விரும்புகிறேன். இதுபோன்ற பெரிய தொடர்களில் ரிதத்தை பிடித்து விட்டால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். ஒருவேளை நம்முடைய ரிதம் நம்மிடம் இருந்து தவறினால் மீண்டும் கொண்டு வருவது மிக கடினம். இந்த உலகக் கோப்பை தொடரில் நான் தொடர்ச்சியாக நல்ல ஏரியாவில் பந்துவீச விரும்புகிறேன். அதனாலேயே எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கிறது. இதில் வேறு ஏதும் ரகசியம் கிடையாது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை ரிப்பீட்.. 5 டக் அவுட்.. இலங்கையை ஓடவிட்ட இந்தியா.. சரித்திர சாதனை வெற்றி

உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியின் சார்பாக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த சிறப்பான பங்களிப்பை நான் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக வழங்க விரும்புகிறேன். இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு மிக அருமையாக இருந்தது. இங்கு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் எங்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக ஆட்டநாயகன் முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement