நான் செஞ்ச தப்ப சரிபண்ணிட்டேன்.. அந்த கிடைக்காத சான்ஸை தவற விடமாட்டோம்.. ஷமி பேட்டி

Shami Press
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் முடிவில் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 397/4 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் 105, கில் 80*, ரோஹித் சர்மா 47, கேஎல் ராகுல் 39* ரன்கள் அடித்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 398 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே, ரவீந்திராவை தலா 13 ரன்களில் ஷமி வேகத்தில் அவுட்டான நிலையில் 2வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் வில்லியம்சன் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார்.

- Advertisement -

ஷமி மகிழ்ச்சி:
இருப்பினும் அவர் கொடுத்த கேட்ச்சை குறைந்த ரன்களில் தவறவிட்ட ஷமி அதற்காக ரசிகர்கள் வருந்துவதற்கு முன்பாகவே 69 ரன்களில் வில்லியம்சனை அவுட்டாக்கி அடுத்து வந்த டாம் லாதமை டக் அவுட்டாக்கினார். அதற்கிடையே கிளன் பிலிப்ஸ் 41 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டாக மறுபுறம் சதமடித்து சவாலை கொடுத்த டார்ல் மிட்சேலையும் 134 ரன்களில் அவுட்டாக்கிய ஷமி 48.5 ஓவரில் 327 ரன்களுக்கு நியூசிலாந்தை சுருட்டி இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில் வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்ததாக தெரிவிக்கும் ஆட்டநாயகன் ஷமி அதற்காக தாமே ரிஸ்க் எடுத்து வேகத்தை மாற்றி விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் 2015, 2019இல் தவற விட்ட உலகக்கோப்பை வாய்ப்பு இம்முறை மீண்டும் வைத்துள்ளதால் அதை விட மாட்டோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடாத நான் என்னுடைய வாய்ப்புக்காக காத்திருந்தேன். யார்கர், மெதுவான பந்துகளை வீசுவதைப் பற்றி யோசித்து வைத்திருந்தேன். புதிய பந்தில் நிறைய விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கிறேன். வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்தேன். அதற்காக வேகத்தை குறைத்து வீசிய பந்துகளில் அவர்கள் நல்ல ஷாட்டை அடித்து விளையாடிய போதிலும் நான் சில ரிஸ்க் சான்ஸ் எடுத்தேன்”

இதையும் படிங்க: நான் செஞ்ச தப்ப சரிபண்ணிட்டேன்.. அந்த கிடைக்காத சான்ஸை தவற விடமாட்டோம்.. ஷமி பேட்டி

“பிட்ச் நன்றாக இருந்த நிலையில் இலக்கு அதிகமாக இருந்தது. அதே சமயம் மெதுவான பந்துகள் வேலை செய்யவில்லை. இந்த வெற்றி அபாரமான உணர்வை கொடுக்கிறது. 2015, 2019 உலக கோப்பை செமி ஃபைனலில் நாங்கள் தோற்றோம். எனவே தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன். இந்த ஃபைனல் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் கிடைக்குமா என்பது தெரியாது” என்று கூறினார்.

Advertisement