23 வருட காத்திருப்பு.. கேட்ச்சை விட்டாலும் மேட்சை விடாத ஷமி.. நியூசிலாந்தை அடக்கிய இந்தியா ஃபைனல் சென்றது எப்படி?

Shami IND vs NZ
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் முதல் செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் லீக் சுற்றில் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 47 (29) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 80* (66) ரன்கள் எடுத்து மும்பை வெப்பத்தால் பாதியிலேயே வெளியேறிய நிலையில் அடுத்ததாக வந்திருந்த விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரராகவும் ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்கள் அடித்த முதல் வீரராகவும் சாதனை படைத்து சச்சினை மிஞ்சி 117 (113) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 105 (70) ரன்கள் குவித்தார். இறுதியில் கேல் ராகுல் 39* (20) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 397/4 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 3 விக்கெட்கள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 398 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே டேவோன் கான்வே, ராச்சின் ரவீந்திராவை தலா 13 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். அதனால் 39/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல அதிரடியாகவும் விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தனர்.

- Advertisement -

அதில் ஷமி விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ரசிகர்களை கலங்கடித்த வில்லியம்சனை கடைசியில் அவரே 69 ரன்களில் அவுட்டாக்கி அடுத்ததாக வந்த டாம் லாதமையும் டக் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அந்த நிலையில் அடுத்ததாக வந்து சவாலை கொடுக்க முயற்சித்த கிளன் பிலிப்ஸை 41 (33) ரன்களில் பும்ரா அவுட்டாக்க அடுத்ததாக வந்த மார்ச் சேப்மேனும் 2 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கினார்.

இறுதியில் மறுபுறம் சதமடித்து சவாலை கொடுத்த டார்ல் மிட்சேலையும் 134 (119) ரன்களில் ஷமி அவுட்டாக்கியதால் 48.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் வெற்றி நாயகனாக அவதரித்தார். அதனால் 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நவம்பர் 19இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: கேட்ச் விட்டாலும் நியூஸிலாந்தை விடாத ஷமி.. சரித்திர சாதனையுடன் படைத்து இந்தியா ஃபைனல் சென்றது எப்படி?

அதை விட 2000 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2021 சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தோல்விகளை தொடர்ந்து 23 வருடங்கள் காத்திருந்த இந்தியா ஐசிசி நாக் அவுட் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து சரித்திரம் படைத்துள்ளது.

Advertisement