அதெல்லாம் பொய் நம்பாதீங்க.. தனது காயம் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை விளாசிய ஷமி

Mohammed SHami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்தார். அத்தொடரில் அதிரடியாக பந்து வீசிய அவர் எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அத்தொடரின் போது சந்தித்த காயத்தையும் தாண்டி முழுமையாக விளையாடிய அவர் அதன் பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அந்த காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத அவர் சுமார் ஒரு வருடமாகியும் இந்தியாவுக்காக விளையாடவில்லை. அதே சமயம் தற்போது 90% குணமடைந்து விட்டதால் மீண்டும் ஷமி பந்து வீசி பயிற்சிகளை எடுக்கத் துவங்கியுள்ளார். அதனால் அடுத்து நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஷமி மீண்டும் காயமா:

அப்படி இல்லையென்றாலும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஷமி விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறியிருந்தார். அந்த சூழ்நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி பயிற்சி எடுக்கும் போது ஷமி தன்னுடைய முழங்காலில் புதிய காயத்தை சந்தித்ததாக செய்தி வெளியானது. அதனால் 6 முதல் 8 வாரங்களுக்கு அவரால் மீண்டும் விளையாட முடியாது என இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிரபலமான ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

இதன் காரணமாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஷமி விளையாடுவது சந்தேகம் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் தாம் புதிதாக எந்த காயத்தையும் சந்திக்கவில்லை என்று ஷமி தம்முடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே இந்த செய்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

பொய்யான செய்திகள்:

அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற செய்தியை வெளியிட்ட இந்திய ஊடகங்களை சாடியுள்ள ஷமி இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஏன் இப்படி ஆதாரமற்ற வதந்திகள் வருகின்றன? நான் கடினமாக உழைத்து மீண்டும் விளையாட வருவதற்கு என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்து வருகிறேன். பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதாக நான் அல்லது பிசிசிஐ குறிப்பிடவில்லை”

இதையும் படிங்க: பிரஷரான சுச்சுவேஷன்னா ரோஹித் சர்மா அவரை தான் கண்ணை மூடிட்டு கூப்புடுவாரு – தினேஷ் கார்த்திக் பாராட்டு

“ஆதாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து வரும் இதுபோன்ற செய்திகளுக்கு கவனம் செலுத்துவதை நிறுத்துமாறு பொது மக்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து நிறுத்துங்கள் எனது அறிக்கையில் இல்லாமல் இது போன்ற போலியான செய்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement