ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டி போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவின் ஆயுதம் அவர்தான் :
ஏனெனில் அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களுக்கு முன்னணி வீரர்கள் அவசியம் என்பதால் இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அசத்தலாக பந்துவீசி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பொதுவாகவே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் பும்ரா அசத்தலாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருவது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட் போட்டிகளின் விளையாடியுள்ள பும்ரா 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய மண்ணில் அவர் இதுவரை 10 போட்டிகளில் 44 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்தியாவில் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சிலும் அசத்தும் இவரது செயல்பாடு பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்நிலையில் போட்டியின் எந்த நேரத்திலும் அழுத்தம் ஏற்படும் போதும் கேப்டன் ரோகித் சர்மா பும்ராவை தான் அழைப்பார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய் அவர் கூறுகையில் : பும்ரா இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. ரோகித் சர்மாவிற்கும் அவர் பொக்கிஷமாக இருந்து வருகிறார். ஏனெனில் ரோகித் சர்மா அழுத்தமான சூழ்நிலைகளில் பும்ராவை வைத்து அழகாக கையாண்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறார்.
எப்பொழுதெல்லாம் போட்டி கடினமான சூழ்நிலையை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் பும்ராவை ஒரு ஆயுதமாக வைத்து அவர் எதிரணியை வீழ்த்துகிறார். பும்ராவும் அதற்கேற்றார் போல் எந்த நேரத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறமையை வைத்துள்ளார். பழைய பந்தோ, புது பந்தோ எப்போது வேண்டுமானாலும் பும்ராவிடம் நம்பி பந்தினை கொடுக்கலாம்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட எனக்கு ஆசை.. அதுக்கு காரணம் இருக்கு – ஜிதேஷ் சர்மா
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி இரண்டு நாட்களில் மெஹதி ஹாசனை அவர் இருமுறை வீழ்த்திய விதம் அசத்தலாக இருந்தது. பும்ரா பந்துவீச்சில் ஒரு மாஸ்டர் கிளாஸ் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவரை ரோஹித் சர்மாவும் அற்புதமாக பயன்படுத்தி வருகிறார் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.