ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட எனக்கு ஆசை.. அதுக்கு காரணம் இருக்கு – ஜிதேஷ் சர்மா

Jitesh-Sharma
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ஜிதேஷ் சர்மா கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 730 ரன்களை குவித்துள்ளார். அதிரடி பினிஷராக பார்க்கப்படும் இவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த ஆண்டு இவருக்கு இந்திய டி20 அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 100 ரன்களை மட்டுமே குவித்து இருந்தாலும் பினிஷராக பார்க்கப்படும் அவர் போட்டியை முடித்துக் கொடுப்பதில் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாட விருப்பம் :

அதன் காரணமாக அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பேக்கப் விக்கெட் கீப்பராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க இருப்பதினால் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடியிருந்த அவருக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதன் காரணமாக ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் தற்போது ஜிதேஷ் சர்மாவிற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தான் இந்திய அணிக்கு தேர்வாகியது குறித்து பேசிய ஜிதேஷ் சர்மா கூறுகையில் : கடந்த சில மாதங்களாகவே நிச்சயம் எனது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வந்ததை ஒப்புக்கொள்கிறேன். வழக்கமாக பேட்டிங் செய்யும்போது போட்டியை ஃபினிஷிங் செய்யும் நோக்கில் தான் விளையாடுவேன்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் எனக்கு நானே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அதனை சமாளிக்க முடியாமலேயே பார்மில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் தற்போது அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்று வருகிறேன். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன் என்று கூறினார். மேலும் ஐபிஎல் தொடர் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறுகையில் : பஞ்சாப் கிங்ஸ் அணி என்னை தக்க வைப்பார்களா? என்று தெரியாது.

இதையும் படிங்க : அஸ்வின் இந்த பட்டத்துக்கு தகுதியானவர்.. இந்தியாவில் இதை செய்வது எதிரணிக்கு கனவாகிடுச்சு.. ரமீஸ் ராஜா

ஆனால் எனக்கு பிடித்த அணி என்றால் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தான். ஏனெனில் ஏற்கனவே நான் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி உள்ளேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் கூட அதனால் சிஎஸ்கே அணிக்காக விளையாட எனக்கு விருப்பம் உள்ளது. அதேபோன்று மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று வான்கடே மைதானத்தில் விளையாட வேண்டும் என்று ஆசையும் இருக்கிறது என ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement