வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா ஒய்ட்வாஷ் செய்து 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல உங்களையும் வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான என்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.
அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும் 11 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார். குறிப்பாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தனது சொந்த மண்ணில் சதமடித்த அவர் 6 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 வயதில் ஒரு போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த முதல் வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்தார்.
ஆல் ரவுண்டர் அஸ்வின்:
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். அதனால் அஸ்வின் பவுலர் என்பதைத் தாண்டி ஆல் ரவுண்டர் என்ற பட்டத்துடன் அழைப்பதற்கு தகுதியானவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது வெளிநாட்டு அணிகளுக்கு கனவாக்கி விட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ரமீஸ் ராஜா பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவுக்கு இந்திய பவுலர்கள் ஆதரவு கொடுத்தனர். முதல் இன்னிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களும் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களும் அசத்தினார்கள். அஸ்வினுக்கு இந்த தொடர் மிகச் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சொந்த ஊரில் சதமடித்த அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார். இது அவருடைய ஆல் ரவுண்டர் திறனை காட்டுகிறது”
தரமான இந்தியா:
“இருப்பினும் கிரிக்கெட்டில் அவர் அந்தப் பட்டத்தை பெறவில்லை. உண்மையில் அவர் ஆல் ரவுண்டர் என்று அழைக்கப்பட வேண்டும். அஸ்வின் எதற்கும் குறைந்தவர் அல்ல. அவர் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ரன்களும் விக்கெட்டுகளும் எடுக்கிறார். அதை செய்த பின் அவர் அதிகப்படியான டிராமாவை செய்வதில்லை. வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரை எளிதாக வென்றுள்ளது”
இதையும் படிங்க: அந்த ரிஸ்க் இப்படி போய்ருந்தா எல்லாரும் திட்டிருப்பாங்க.. அதிரடிக்கு அர்த்தமே வேற.. ரோஹித் சர்மா பேட்டி
“தற்சமயத்தில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு கடினமான அணியாக இருக்கிறது. இப்படிப்பட்ட வெற்றிகரமான அணிக்கு வங்கதேசம் வெற்றி பெறுவதற்கு கடினமான முயற்சிகளை செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு அணிகள் வெற்றி பெறுவது கனவாகும். உண்மையில் இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் கெப்பாசிட்டி வங்கதேசத்திடம் இல்லை” என்று கூறினார்.