பாண்டியா வந்ததும் அவர பெஞ்சில் உட்கார வெச்சு மறுபடியும் தப்பு பண்ணாதீங்க.. இந்திய அணிக்கு கம்பீர் அறிவுரை

gautam gambhir 4.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

முன்னதாக அப்போட்டியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடாததால் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக சர்துள் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமி தேர்வான நிலையில் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

கம்பீர் கோரிக்கை:
அதில் பந்து வீச்சு துறையில் மிரட்டலாக செயல்பட்ட முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்து உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்தார். மேலும் 234/4 என்ற வலுவான நிலைமையில் இருந்த நியூசிலாந்தை 274 ரன்களுக்கு இந்தியா சுருட்ட உதவிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆனாலும் கடந்த 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவருக்கு பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்தால் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முகமது ஷமி இத்தொடரின் முதல் போட்டியிலிருந்தே விளையாடியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் கௌதம் முன்பே ஒருவேளை பாண்டியா வந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதற்கான வழியை பார்க்க வேண்டும் என்று அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது வருமாறு. “ஷமியிடம் வித்தியாசமான கிளாஸ் இருக்கிறது. இருப்பினும் அவரை வெளியே உட்கார வைக்க இந்திய அணிக்கு பல விஷயங்கள் தேவைப்படும். ஷமி இல்லாமல் நீங்கள் 4 தொடர்ச்சியான போட்டிகளில் வென்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்தே 11 பேர் அணியில் இருந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: இதெல்லாம் உண்மையாவே ரொம்ப கஷ்டம்.. ஆனா கோலி கம்யூட்டர் மாதிரி ஈஸியாக்குறாரு.. வாட்சன் வியாபான பாராட்டு

“தர்மசாலா மைதானத்தில் இந்தியா 5 பவுலர்களுடன் சென்றது பவுலர்களைப் பொறுத்த வரை கடினமான ஒன்றாகும். ஆனாலும் அதில் 5 விக்கெட்டுகளை எடுத்தால் அந்த பவுலரின் லெவலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவரை எப்படி பெஞ்சில் அமர வைக்கக் கூடாது என்பதை பற்றி அணி நிர்வாகம் பார்க்க வேண்டும். குறிப்பாக பாண்டியா கம்பேக் கொடுத்தாலும் அவரை நீங்கள் அணியில் வைத்து விளையாடுவீர்களா” என்று கூறினார்.

Advertisement