அப்படி ஒரு பிரச்சனை இருந்தும் உலககோப்பை தொடரில் விளையாடிய முகமது ஷமி – இதுதான் உண்மையான அர்ப்பணிப்பு

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியின் போது 57 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது அசுத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

நடைபெற்று முடிந்த இந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்ப கட்ட லீக் போட்டிகளில் ஹார்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடியதால் இடம் பெறாத முகமது ஷமி ஹார்டிக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பிடித்து தொடர்ச்சியாக தனது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே அவர் ஒரு பிரச்சனையுடன் விளையாடியது குறித்த தகவல் தற்போது வெளியாகி அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நம்பத்தகருந்த தரப்பிலிருந்து வெளியான ஒரு தகவலின் படி : முகமது ஷமி இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் போது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்துடன் தான் முழு உலகக்கோப்பை தொடரிலும் அவர் விளையாடி உள்ளார்.

- Advertisement -

அதோடு இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக இவர் சாதனை படைத்திருந்தாலும் கணுக்கால் வலியுடனே ஒவ்வொரு போட்டியிடும் விளையாடி உள்ளார். குறிப்பாக பந்து வீசும் போது அவர் காலை கீழே வைக்கும் இடது கால் பகுதியில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் உலக கோப்பையை வென்றாக வேண்டிய லட்சியத்தில் அவர் தொடர்ந்து பந்து வீசியுள்ளார்.

இதையும் படிங்க : சவாலான தெ.ஆ டி20 தொடரை இந்தியா வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம்.. அதிக ரன்ஸ், விக்கெட்ஸ் பட்டியல்

எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம் பெற்றிருந்தாலும் அவரது பிட்னஸின் அடிப்படையில் தான் அவர் அணியில் இணைவது உறுதியாகும் என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 26-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் துவங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக முகமது ஷமி முழுவதுமாக உடற்தகுசி பெற்று விடுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement