ஆஸியின் சிறந்த ஸ்பின்னரை வெளுத்த ஷமி – யுவி, விராட் கோலி போன்ற நட்சத்திரங்களை மிஞ்சி தனித்துவமான சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 3 போட்டிகளை வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களறங்கியுள்ளது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மாவுடன் 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடவலாக செயல்பட்ட ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த அஷ்வின் 23 ரன்கள் எடுத்தாலும் புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமார் யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாகவும் நேரம் செல்ல செல்ல நிதானமாகவும் செயல்பட்டு 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 120 (212) ரன்கள் குவித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தி அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய ஷமி:
அதனால் எளிதாக இந்தியாவை காலி செய்து விடலாம் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு 8வது விக்கெட்டுக்கு அக்சர் படேலுடன் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய தொல்லை கொடுத்த ரவீந்திர ஜடேஜா 9 பவுண்டரியுடன் 70 ரன்கள் குவித்து தன்னை நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்து அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய முகமது ஷமி போட்டியின் தலையெழுத்திய தீர்மானிக்கக் கூடிய 37 (47) ரன்களை 2 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக விளாசி ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த அக்சர் படேல் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 84 (174) ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக போராடி ஆட்டமிழந்தார்.

அப்படி டாப் ஆர்டரில் ரோகித் சர்மா லோயர் மிடில் ஆர்டரில் ஜடேஜா, அக்சர் படேல் போன்ற பேட்ஸ்மேன்களின் உதவியால் சுழலுக்கு மைதானத்திலும் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து 223 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்த முகமது ஷமி டேவிட் வார்னரின் ஸ்டம்ப்களை பறக்க விட்டு பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை பொய்யாக்கினார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் 10வது இடத்தில் களமிறங்கிய அவர் முக்கியமான 37 விலைமதிப்பு மிக்க ரன்களை விளாசினார். குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் அறிமுக போட்டியிலேயே அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்திய டோட் முர்ஃபி வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்ட அவர் தனது கேரியரில் மொத்தமாக இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் 25 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதன் வாயிலாக விராட் கோலி (24), யுவராஜ் சிங் (22), ராகுல் டிராவிட் (21), முகமது அசாருதீன் (19), புஜாரா (15), லக்ஷ்மன் (5) போன்ற இந்திய கிரிக்கெட் வரலாற்றின் நட்சத்திர வீரர்களை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது ஷமி அதிக சிக்சர்களை அடித்துள்ளார் என்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது. மேலும் இப்போட்டியை போலவே ஏற்கனவே ஒருமுறை 10வது இடத்தில் களமிறங்கி முகமது ஷமி 3 சிக்சர்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருமாதம் கடந்த நிலையில் தனது புகைப்படத்தை பகிர்ந்து நற்செய்தி சொன்ன ரிஷப் பண்ட் – விவரம் இதோ

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி ஒரு இன்னிங்ஸில் 2 முறை 3 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், பிஷன் பேடி, அபய் குருவில்லா ஆகியோர் தலா ஒரு முறை மட்டுமே 10வது இடத்தில் களமிறங்கி 3 சிக்ஸர்களை அடித்தது முந்தைய சாதனையாகும்.

Advertisement