IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை தெரியுமா? – விவரம் இதோ

shami
- Advertisement -

இந்திய அணியானது ஜூலை முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப்பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீரர்களின் பட்டியலில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார்.

அதோடு சில இளம் வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த பல மாதங்களாக இந்திய வீரர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Shami

ஆனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் பி.சி.சி.ஐ எந்த ஒரு வீரருக்கும் ஓய்வு கொடுக்காமல் முதன்மை அணியே தேர்வு செய்துள்ளது. இருப்பினும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறாதது ஏன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கான விளக்கத்தை இங்கு காணலாம். அதன்படி கடந்த ஓராண்டிற்கு மேலாகவே பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருவதால் முகமது ஷமியே இந்திய அணியை பந்துவீச்சில் முன்னின்று வழிநடத்தி வருகிறார். அதோடு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் முகமது ஷமி ஓய்வின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பந்துவீசி வருகிறார்.

இதையும் படிங்க : இது தான் நீங்க இந்தியாவின் வருங்கால கேப்டனை வளர்க்கும் லட்சணமா? தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள் – காரணம் இதோ

அதிலும் குறிப்பாக தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாட வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறயிருக்கும் 50 ஓவர் உலககோப்பையை கணக்கில் கொண்டும் இந்த ஓய்வு அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement