இது தான் நீங்க இந்தியாவின் வருங்கால கேப்டனை வளர்க்கும் லட்சணமா? தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள் – காரணம் இதோ

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த வீரர்கள் இத்தொடரில் கழற்றி விடப்படுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதற்கேற்றார் போல் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டது வரவேற்பை பெறுகிறது. மேலும் ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டாரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடரும் நிலையில் துணை கேப்டனாக அஜிங்க்ய ரகானே நியமிக்கப்பட்டது சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தொலைநோக்கு பார்வை:
ஏனெனில் 2016 – 2021 வரை இந்தியாவைத் தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து சர்ச்சைக்குரிய முறையில் விடைபெற்ற விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் இருதரப்பு தொடர்களில் அசத்திய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய தவறிய நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் டாஸ் அதிர்ஷ்டத்தை தவற விட்டு அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது தோல்வியை கொடுத்தது.

அதனால் பதவி விலக வேண்டுமென்று ரசிகர்களுக்கு கொந்தளித்தாலும் அடுத்ததாக டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடர் தவிர்த்து வேறு தொடர்கள் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போலவே 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவின் மிகச் சிறப்பாக வழி நடத்தி ஆஸ்திரேலிய மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த ரகானே தற்காலிக நிலமையை சமாளிப்பதற்காக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

ஆனால் அதற்கு ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ரகானேவை நேரடியாக கேப்டனாகவே நியமித்திருந்தால் சிறந்த முடிவாக இருந்திருக்கும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித்தை விட நல்ல அனுபவமிக்க அவர் ஃபைனலிலும் அதிக ரன்கள் எடுத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் அதை செய்யாத தேர்வுக்குழு சுப்மன் கில் போன்ற ஏதேனும் இளம் வீரர்களை துணை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

ஏனெனில் இதே போலவே 2022 ஜனவரியில் அதிரடியாக நீக்கப்பட்ட புஜாரா மீண்டும் கம்பேக் கொடுத்த போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு தற்போது ஃபைனலில் சொதப்பியதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் உண்மையாகவே தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட நினைத்தால் ரகானேவை மீண்டும் நியமிப்பதற்கு பதிலாக ஒரு இளம் வீரரை துணை கேப்டனாக அறிவித்து வளர்ப்பதே சரியான முடிவாக இருக்கும். குறிப்பாக 35 வயதாகி விட்ட அவருக்கு பதிலாக கில் அல்லது வேறு ஏதேனும் இளம் வீரர்களை துணை கேப்டனாக அறிவித்து வளர்த்தால் வருங்காலம் பிரகாசமாகலாம்.

- Advertisement -

காரணம் இங்கு அனுபவமில்லாத இளம் வீரரான தோனி தான் வாய்ப்பு கிடைத்ததால் இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக உருவெடுத்தார். அது போக ஒருவேளை ரோகித் சர்மாவுக்கு பதிலாக வரும் டிசம்பரில் ரகானே நிரந்தர கேப்டனாக அறிவிக்கும் பட்சத்தில் இப்போதே ஒரு இளம் வீரரை துணை கேப்டனாக அறிவித்திருந்தால் வருங்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:இப்டியே பண்ணீங்கன்னா பேசாம ரிட்டையர் ஆகிடுவேன், தனது கேப்டன் பென் ஸ்டோக்ஸை எச்சரித்த ஆண்டர்சன் – நடந்தது என்ன?

ஆனால் அவை எதையுமே செய்யாத தேர்வுக்குழு சமீப காலங்களில் புஜாரா, கேஎல் ராகுல் போன்றவர்களை துணை கேப்டன்களாக நியமித்துக் கழற்றி விட்ட அதே தவறை மீண்டும் செய்துள்ளது. அதனால் ஏமாற்றமடையும் ரசிகர்கள் இதுதான் இந்தியாவின் வருங்கால கேப்டனை நீங்கள் வளர்க்கும் லட்சணமா என்று விமர்சிக்கின்றனர்.

Advertisement