இப்டியே பண்ணீங்கன்னா பேசாம ரிட்டையர் ஆகிடுவேன், தனது கேப்டன் பென் ஸ்டோக்ஸை எச்சரித்த ஆண்டர்சன் – நடந்தது என்ன?

James-Anderson
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக 393/8 ரன்கள் குவித்து ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்ததால் வெற்றிக்கு தேவையான எக்ஸ்ட்ரா 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் கோட்டை விட்டது தோல்வியை கொடுத்தது. அதே போல 2வது இன்னிங்சில் வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற போது பொறுப்புடன் செயல்படாமல் அதே அதிரடியான ஸ்டைலில் விளையாடுவோம் என்று அடம் பிடித்து 300 ரன்களை கூட இலக்காக நிர்ணயிக்காததது தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

முன்னதாக ஜோ ரூட் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை கண்டது. மேலும் கடந்த டிசம்பரில் தார் ரோட் போல இருந்த பிட்ச்களில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி உடைத்த இங்கிலாந்து இதே அணுகுமுறையை தொடரலாம் என்று நினைத்தது.

ரிட்டையர் ஆகிடுவேன்:
ஆனால் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்திடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து தற்போது இப்போட்டியிலும் தோற்றுள்ளதால் பேசாமல் இதையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு பழைய ஸ்டைலில் விளையாடி கெளரவமான ஆஷஸ் கோப்பையை வெல்லுமாறு அந்நாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். முன்னதாக இந்த தொடரில் ரசிகர்களை மகிழ்வித்து அதன் அடியாக விளையாடுவதற்காக சிறிய பவுண்டரி அளவுடன் வேகத்துக்கு சாதகமான தார் ரோட் போன்ற பிட்ச்சையும் அமைக்குமாறு கேட்டுக்கொள்ள உள்ளதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

Ben Stokes

இந்நிலையில் ஸ்விங், வேகம் என எதற்குமே சாதகமில்லாமல் இருக்கும் இது போன்ற பிட்ச்களை தொடர்ந்து அமைத்தால் தம்மாலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று தெரிவிக்கும் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதே நிலைமை நீடித்தால் ஓய்வு பெற்று விடுவேன் என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு மறைமுகமான எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.

- Advertisement -

முதல் போட்டியில் வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்ட அவர் இது பற்றி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இதே போல அனைத்து பிட்ச்களும் இருந்தால் நான் ஆஷஸ் தொடரை முடித்து விடுகிறேன். இத்தொடரில் இருக்கும் பிட்ச்கள் கிரிப்டோனை போல இருந்தது. அதில் அதிக ஸ்விங், ரிவர்ஸ் ஸ்சிங், வேகம் மற்றும் பவுன்ஸ் என எதுவுமே இல்லை. முதல் போட்டியில் நான் என்னுடைய செயல்பாடுகளில் உயர்ந்த அளவில் இல்லை என்பதை அறிவேன். அது என்னுடைய சிறந்த செயல்பாடுகள் இல்லை”

anderson 1

“அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் அல்லது கடைசி நாளின் ஆரம்பத்தில் நான் புதிய பந்தில் வீசவில்லை. மேலும் நான் எப்படி உணர்கிறேன் என்பதை பற்றி பென் ஸ்டோக்ஸிடம் பேசினேன். அப்போது அது உயரமான பவுலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச் என்பதை ஒப்புக்கொண்டோம். கடந்த பல வருடங்களில் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் பந்து வீசும் அளவுக்கு என்னுடைய நுணுக்கங்களை முயற்சித்துள்ளேன். ஆனால் அந்த போட்டியில் அனைத்தையும் பிரயோகித்தும் எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை”

- Advertisement -

“மாறாக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தும் மேல் நோக்கி போராடுவது போல் உணர்ந்தேன். அத்துடன் நீண்ட நேரம் விளையாடியதால் ஒவ்வொரு போட்டியிலும் என்னால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தேன். இருப்பினும் இந்த தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன். குறிப்பாக இங்கிலாந்தின் வெற்றிக்கு நான் அதிகமாக பங்காற்ற வேண்டும் என்பதை அறிவேன்.

Anderson

இதையும் படிங்க:தல தோனி எடுத்த அந்த முடிவு தான் இன்னைக்கு ரஹானே மீண்டும் துணை கேப்டனாக காரணம் – என்ன தெரியுமா?

“எனவே முதல் போட்டியில் விட்டதை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் ஈடு செய்ய முயற்சிக்க உள்ளேன்” என்று கூறினார். வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அவர் இப்படி புகார் செய்வது இங்கிலாந்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அமைகிறது.

Advertisement