ஏசியில் உட்காந்துருந்தா அப்டி தான் இருக்கும்.. எகத்தாளமான கேள்வி கேட்ட ஹர்ஷா போக்லேவுக்கு ஷமி கிண்டலான பதில்

Mohammed Shami harsha bhogle
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 2023 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் மார்ஷை 4 (4) ரன்களில் அவுட்டாக்கிய முகமத் ஷமி அடுத்ததாக வந்து சவாலை கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தை 41 ரன்கள் எடுத்திருந்த போது கிளீன் போல்ட்டாக்கினார். மறுபுறம் அசத்திய டேவிட் வார்னர் 52 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் அவுட்டாக மற்றொரு நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் 41 ரன்கள் எடுத்திருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் வித்தியாசமாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

கலாய்த்த ஷமி:
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேமரூன் கிரீன் 31 (52) ரன்களும் ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக 45 (45) ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 29 (21) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் கேப்டன் பட் கமின்ஸ் அதிரடியாக 21* (9) ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 276 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக முகமது சிராஜ் இருப்பதால் ஆசிய கோப்பையில் வாய்ப்பு பெறாத அவர் இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பில் மிரட்டலாக செயல்பட்டு தம்முடைய திறமையை நிரூபித்தார்.

- Advertisement -

அப்படி சிறப்பாக செயல்பட்ட அவரிடம் முதல் இன்னிங்ஸ் முடிவில் நட்சத்திர தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே “இன்று நீங்கள் எந்தளவுக்கு வெப்பத்தை உணர்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “ஆம் வெப்பத்தை உணர்கிறோம். ஏனெனில் நீங்கள் குளிர்சாதன வசதியுடைய ஏசி அறைகளில் அமர்ந்திருப்பதால் களத்தில் விளையாடும் நாங்கள் அதிக வெப்பத்தை உணர்கிறோம்” என்று சிரித்துக்கொண்டே ஷமி பதிலளித்து கலாய்த்தார்.

இதையும் படிங்க: வீடியோ : 9 வருடங்கள்.. 611 நாட்கள் கழித்து அஷ்வினுக்கு வீழ்ந்த மாயாஜால விக்கெட் – கிடைத்தது எப்படி?

அதாவது களத்தில் வியர்வையை சிந்தி விளையாடும் தங்களுக்கு வெப்பம் பெரிய அளவில் தெரியவில்லை என்று தெரிவித்த ஷமி ஒருவேளை குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு வர்ணனை செய்வதால் உங்களுக்கு வெளியே வந்ததும் அதிக வெப்பம் தெரிந்திருக்கலாம் என ஹர்ஷா போக்லேவுக்கு கிண்டலான பதிலை கொடுத்தார். அந்த வகையில் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் உலகக் கோப்பையில் அவருக்கு 11 பேர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement