- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே வீரர் ஷேக் ரஷீத்தின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனித்துவ சாதனை நிகழ்த்திய – முகமது ஷமி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் தொடர்ந்து பத்தாவது இடத்தில் நீடிக்கிறது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றியை சந்தித்த சன்ரைசர்ஸ் அணியானது மூன்றாவது வெற்றியை பெற்று எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

முகமது ஷமி நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பந்துவீசிய சன்ரைசர்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு சுருட்டியது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 42 ரன்களையும், ஆயுஸ் மாத்ரே 30 ரன்களையும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சன்ரைசர்ஸ் அணி சார்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்திசத்தியுள்ளார்.

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது 3 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 28 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் அதன் மூலம் அவர் இந்த மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தை வீசிய முகமது ஷமி சி.எஸ்.கே அணியின் துவக்க வீரரான ஷேக் ரஷீதின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் முகமது ஷமி இதுவரை நான்கு முறை ஐபிஎல் போட்டியின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : மொத்தம் 6 பேர் இருந்தாங்க.. ஆனாலும் தோல்வியை தடுக்க முடியல – முதல்முறையாக சி.எஸ்.கே அணியில் நடந்த அதிசயம்

அதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு துபாய் மைதானத்தில் ஜாக் காலிஸ் விக்கெட்டையும், கடந்த 2022-ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் கே.எல் ராகுல் விக்கெட்டையும், கடந்த 2023-ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் பிலிப் சால்ட் விக்கெட்டையும், அதற்கு அடுத்து நேற்று 2025-ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஷேக் ரஷீத் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -