மொத்தம் 6 பேர் இருந்தாங்க.. ஆனாலும் தோல்வியை தடுக்க முடியல – முதல்முறையாக சி.எஸ்.கே அணியில் நடந்த அதிசயம்

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதிசயம் நடந்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக டேவால்டு பிரேவிஸ் 42 ரன்களையும், ஆயுஸ் மாத்ரே 30 ரன்களையும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது சென்னை அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்களையும், கமிண்டு மெண்டிஸ் 32 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் பொதுவாகவே “டேடிஸ் ஆர்மி” என்று அழைக்கப்படும் சென்னை அணியானது வயது முதிர்ந்த மற்றும் மூத்த வீரர்களை கொண்டே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இளம் வீரர்கள் பலரை அணியில் இணைத்துள்ள சென்னை அணி சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டிக்கான பிளேயிங் லெவனில் 25 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள வீரர்கள் 6 பேரை இணைத்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் ஷேக் ரசீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கரண், டேவால்டு பிரேவிஸ், நூர் அகமது, மதீஷா பதிரானா என ஆறு வீரர்கள் 25 மற்றும் அதற்கு கீழ் உடைய வீரர்களாக சென்னை அணியில் இடம்பெற்றிருந்தனர். இப்படி சென்னை அணியில் அதிக வீரர்கள் இளம் வயதில் இடம்பெறும் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பொதுவாகவே சென்னை அணி வயது மூத்த வீரர்களை வைத்து விளையாடுவதால் தான் தோற்று வருகிறது என்ற ஒரு பேச்சு எப்போதுமே இருந்து வருகிறது.

இதையும் படிங்க : மொத்த சிஎஸ்கே’வும் ஓட்டைன்னா எப்படி அடைக்கிறது? மாறிப்போன அதை புரிஞ்சுக்கிட்டு மாறனும்.. தோனி வேதனை

ஆனால் தற்போது இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தும் சென்னை அணியால் இந்த தோல்வியை தவிர்க்க முடியவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் இப்படி சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement