அகர்கரை முந்திய ஷமி.. இந்தியாவின் உ.கோ லெஜெண்ட்டாக மிட்சேல் ஸ்டார்க்கு நிகராக உலக சாதனை

Mohammed Shami
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்வது. லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடிய 230 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்துக்கு டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டாக்ஸ், கேப்டன் பட்லர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய ஷமி:
அதனால் 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, ஜஸ்பிரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் தொடர்ந்து இத்தொடரில் 6வது வெற்றியை பதிவு செய்த இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வெற்றிக்கு 87 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றாலும் 7 ஓவரில் வெறும் 22 ரன்கள் மட்டுமே கொடுத்த முகமது ஷமி 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக மிரட்டினார் என்று சொல்லலாம். அதிலும் பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான பேட்ஸ்மேன்களை தன்னுடைய மிரட்டல் வேகத்தால் க்ளீன் போல்டாக்கிய அவர் தெறிக்க விட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி கொண்டாட வைத்தது.

- Advertisement -

மேலும் இத்தொடரின் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்று 5 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் இதுவரை வெறும் 13 உலகக்கோப்பை இன்னிங்ஸில் 40 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 40 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 6* (13 இன்னிங்ஸ்)
2. மிட்சேல் ஸ்டார்க் : 6* (24 இன்னிங்ஸ்)
3. இம்ரான் தாஹிர் : 5 (21 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: பர்ஸ்ட் பாகிஸ்தான்.. இப்போ இங்கிலாந்து.. உலககோப்பை வரலாற்றில் மோசமான நிலையை சந்தித்த – நடப்பு சாம்பியன்

அத்துடன் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. முகமத் ஷமி : 13* (95)
2. அஜித் அகர்கர் : 12 (188)
3. ஜகவல் ஸ்ரீநாத் : 10 (227)
4 அனில் கும்ப்ளே : 10 (263)

Advertisement