கபில் தேவ் செஞ்சத இப்போ அவர் செய்றாரு.. இந்திய பவுலருக்கு கவாஸ்கர் அசத்தலான பாராட்டு..

Sunil Gavaskar
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமாக விளையாடி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்கள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கபில் தேவ் மாதிரி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4, பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தனர். இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றாலும் 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய ஷமி அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியிலும் 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் கபில் தேவ் செயல்பட்டதை போல தற்போது முகமது ஷமி இந்தியாவுக்கு செயல்படுவதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. குறிப்பாக வீட்டிற்கு சென்ற போதிலும் அவர் அங்கே வித்தியாசமான பிட்ச்களை உருவாக்கி தொடர்ந்து பந்து வீசி பயிற்சிகளை எடுத்தார். அதுதான் முக்கியமாகும். அவருடைய அபாரமான ஃபிட்னஸையும் பாருங்கள்”

- Advertisement -

“இதற்காக அவர் உடற்பயிற்சி கூடங்களில் நாட்களை செலவிடுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் கபில் தேவ் செய்ததை தற்போது ஷமி செய்து கொண்டிருக்கிறார். அதாவது வலைப்பயிற்சியில் தொடர்ந்து பந்து வீசி பயிற்சிகளை எடுப்பதாகும். குறிப்பாக அவர் வல்லுனர்கள் சொல்வது போல் வலைப்பயிற்சியில் 15 – 20 பந்துகள் மட்டும் வீசுவதில்லை”

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் 3 ஆவது முறையாக தனித்துவ சாதனையுடன் இங்கிலாந்தை சாய்த்த இந்திய அணி – விவரம் இதோ

“வேகப்பந்து வீச்சாளர்களின் மைலேஜ் அதிகரிக்க அதிகமாக ஓட வேண்டும் என்பதை ஷமி அறிவார். அந்த வகையில் அவர் பந்து வீச ஓடுவதை ஸ்பைடர் கேமராவில் பார்க்கும் போது இறையை பிடிக்க ஓடும் சிறுத்தையை போல் தெரிகிறது. அதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்களை எடுத்த ஒரே பவுலாக ஷமி சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement