ஒருநாள் போட்டிகளில் 3 ஆவது முறையாக தனித்துவ சாதனையுடன் இங்கிலாந்தை சாய்த்த இந்திய அணி – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த உலக கோப்பை தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து புள்ளி பட்டியலிலும் தற்போது முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

அதே வேளையில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 87 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி 100 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர் இதில் குறிப்பிட வேண்டிய சாதனை யாதெனில் : இங்கிலாந்து அணியின் வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், பட்லர், அடில் ரஷீத், மார்க் வுட் என ஆறு இங்கிலாந்து வீரர்களை இந்திய அணியின் பவுலர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க : இந்த தொடரில் 2 ஆவது முறை.. ஒட்டுமொத்தமாக 7 முறை.. – உலககோப்பையில் சச்சினுக்கு அடுத்து ரோஹித் படைத்த புது ரெக்கார்டு

இப்படி எதிரணியின் 6 வீரர்களை போல்டு முறையில் இதுவரை இந்தியா இரண்டு முறை ஆட்டமிழக்க வைத்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும், 1993-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இதே போன்ற சாதனை நிகழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 30 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement