நானும் பாபர் அசாமும் ஃபிசிக்ஸ் கெமிஸ்ரி மாதிரி.. தாறுமாறான ஆங்கிலத்தில் ரிஸ்வான் கொடுத்த பேட்டியில்.. குழம்பிய ரசிகர்கள்

Mohammed Rizwan
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் செப்டம்பர் 29ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து சிறப்பான வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 345/5 ரன்கள் குவித்தது.

குறிப்பாக தங்களுடைய கேரியரில் முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக சதமடித்து 103 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 80 ரன்களும் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சாட்னர் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 346 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடைந்து 54 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இயற்பியல் வேதியியல் மாதிரி:
அவருடன் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா 97 (72) டார்ல் மிட்சேல் 59 (57) மார்க் சாப்மேன் 65* (41) ரன்கள் எடுத்ததால் 43.4 ஓவரிலேயே 346/5 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வென்றதால் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உசாமா மிர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தானை தூக்கி நிறுத்தும் அளவுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

அதன் காரணமாக போட்டியின் முடிவில் உங்கள் இருவருக்கிடையேயான புரிதல் எப்படி இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது இயற்பியல் வேதியியல் போல நானும் பாபர் அசாமும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளாமலேயே நன்றாக புரிந்து கொண்டு சிங்கிள் எடுப்போம் என்று புரியாத ஆங்கிலத்தில் தாறுமாறாக பதிலளித்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏனெனில் நான் மற்றும் பாபர் கெமிஸ்ட்ரி (வேதியியல்) ஒரே மாதிரி ஃபிசிக்ஸ் (இயற்பியல்) ஒரே மாதிரி இருக்கிறது. அதனால் சில நேரங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் அழைக்க கூட மாட்டோம். ஆனால் சரியாக சிங்கள் எடுக்க ஓடுவோம்” என்று அவர் கூறியது ரசிகர்களை குழப்புவதாக அமைந்தது. மேலும் இந்திய மண்ணில் முதல் முறையாக சதமடித்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: பும்ராவையே நொறுக்கிட்டாங்க.. 2023 உ.கோ பிளேயிங் லெவனில் அஸ்வின் கண்டிப்பா இருக்கணும்.. கவாஸ்கர் சொல்லும் காரணம்

“ஒரு சதம் சதமாகும். அதற்காக நான் பெருமையுடன் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக பாகிஸ்தானுக்காக வெளிநாட்டு மண்ணில் சதமடிப்பது எப்போதுமே ஸ்பெஷலாகும். மேலும் விமான நிலையத்திலிருந்து மைதானம் வரை பாகிஸ்தானில் இருக்கும் ரசிகர்களைப் போலவே இந்திய ரசிகர்கள் எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தனர். எங்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement