எல்லாம் ஓகே. அடுத்த 1.5 மாசத்துக்கு எங்களை இப்படியே சப்போர்ட் பண்ணுங்க. இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த – ரிஸ்வான்

Rizwan
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக புதன்கிழமை மாலை ஹைதராபாத் வந்தடைந்தது. லாகூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேராக துபாய் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் பாகிஸ்தான் அணி தற்போது இந்தியா வந்துள்ளதால் அவர்களுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

அதோடு பாகிஸ்தான் வீரர்களுக்கு முறைப்படியான மரியாதை வழங்கப்பட்டு அவர்கள் ஹோட்டல் அறைகளுக்கும் சென்றடைந்தனர். இப்படி இந்திய ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்து பாகிஸ்தான் அணி முழுவதற்கும் வரவேற்பு கொடுத்ததை அடுத்து அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் ஹைதராபாத் நகரில் இந்திய ரசிகர்கள் வழங்கிய அன்பிற்க்கும், ஆதரவிற்கும் நன்றி என தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : ஹைதராபாத் வந்து நாங்கள் இறங்கியதும் எங்களுக்கு இந்திய ரசிகர்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். எல்லாம் நல்லபடியாக இருந்தது.

அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவை என இந்திய ரசிகர்களுக்கு நன்றி கூறி அந்த பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவிற்கு ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ஹசன் அலிக்கு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது தவிர்த்து தற்போது சற்று பார்ம் இழந்து காணப்படும் ஷதாப் கானுக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக ஒசாமா மிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணியானது உலகக்கோப்பையை குறிவைத்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதையும் படிங்க : போராட்டதிற்கு கிடைத்த பரிசு.. வீரர்களின் சம்பளத்தை உயர்த்திய பாகிஸ்தான் வாரியம் – புதிய சம்பள பட்டியல் இதோ

அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 29-ஆம் தேதியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அக்டோபர் 3-ஆம் தேதியும் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், அக்டோபர் 10-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும், அக்டோபர் 14-ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement