- Advertisement -
இந்திய கிரிக்கெட்

8 வருடத்தில் வெறும் 13.. அஸ்வினும் இல்லாத சமயத்தில் குல்தீப்புக்கு அநியாயம் பண்ணாதீங்க.. ஃகைப் பதிவு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்களை அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பது பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஏனெனில் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சுமாராக பவுலிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். முன்னதாக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் யாதவ் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் சிறப்பாக பவுலிங் செய்த அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கே மிகப்பெரிய சவாலைக் கொடுத்தார்.

- Advertisement -

8 வருடத்தில் வெறும் 13:

அதனால் அப்போதைய கேப்டன் விராட் கோலி 2019 சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக அவரைத் தேர்ந்தெடுத்தார். அந்த வாய்ப்பில் அபாரமாக பவுலிங் செய்த குல்தீப் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் சுதாரித்த அஸ்வின் தம்முடைய திறமைகளை இன்னும் பட்டைத் தீட்டி வெளிநாடுகளிலும் சிறப்பாக பவுலிங் செய்தார். குறிப்பாக 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தை 2 முறை அவுட்டாக்கிய அஸ்வின் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

அதன் காரணமாக முதன்மை ஸ்பின்னர் என்ற அந்தஸ்தை அஸ்வின் ஓய்வு பெறும் வரை தக்க வைத்துக் கொண்டார். அதே காரணத்தால் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெறாத குல்தீப் யாதவ் கடந்த 8 வருடங்களில் வெறும் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2024இல் இதே இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

இனிமேலும் அநியாயம் பண்ணாதீங்க:

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற பின்பும் குல்தீப் யாதவை முதன்மை ஸ்பின்னராக விளையாட வைக்காதது அநியாயம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று கைஃப் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவர் விளையாடலனா எங்க பிளேயர்ஸ் தான் ஹேப்பியா இருப்பாங்க.. பும்ரா குறித்து – இயான் பெல் பேச்சு

“2வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இல்லாமல் போனால் அது நியாயமற்றதாகும். 8 வருடங்களில் அவர் வெறும் 13 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதுவரை அஸ்வின் இருந்ததால் அவர் வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார். இனிமேல் அவரைப் புறக்கணித்து விளையாடுவதை உங்களால் நியாயப்படுத்த முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி முதல் பர்மிங்கம் நகரில் நடக்கிறது.

- Advertisement -